முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிட்னி டெஸ்ட்: ஆஸி. அணியில் ஹாரிஸ் சேர்ப்பு

சனிக்கிழமை, 31 டிசம்பர் 2011      விளையாட்டு
Image Unavailable

 

சிட்னி, ஜன.1 - இந்தியாவுக்கு எதிராக சிட்னி நகரில் நடக்க இருக்கும் 2 -வதுகிரிக்கெ ட் டெஸ்ட் போட்டிக்கான ஆஸ்திரேலிய அணியில் 12- வது வீரராக வேகப் பந்து வீச்சாளர் ரியான் ஹாரிஸ் சேர்க்கப்பட்டு இருக்கிறார். 

ஆஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகளுக்கு இடையே 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடந்து வருகிறது. இதன் முதல் போட்டி கடந்த வாரம் மெல்போர்ன் நகரில் நடைபெற்றது. 

மெல்போர்ன் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 122 ரன் வித்தியாசத் தில் வெற்றி பெற்றது. ஆஸி. அணியில் இடம் பெற்ற அனுபவம் இல் லாத இளம் பந்து வீச்சாளர்கள் இந்த வெற்றியைப் பெற்றுத் தந்தனர். 

கேப்டவுனில் கடந்த மாதம் தென் ஆப்பிரிக்காவிற்கு எதிராக நடந்த டெஸ்ட் போட்டியின் போது, இளம் வீரரான ஹாரிசிற்கு வயிற்றில் காயம் ஏற்பட்டது. இதனால் அவரால் மெல்போர்ன் டெஸ்டில் பங் கேற்க முடியவில்லை. 

காயத்திற்காக சிகிட்சை எடுத்துக்கொண்ட அவர் பின்பு மறுவாழ்வு சிகிட்சையும் எடுத்து வந்தார். தற்போது அவரது காயம் குணமடைந் து முழு உடற் தகுதி பெற்று இருப்பதால் 2 -வது டெஸ்டில் இடம் பெற இருக்கிறார். 

நியூ செளத்வேல்சைச் சேர்ந்த 32 வயதான ரியான் ஹாரிஸ் ஒரு ஆல்ர வுண்டராவார். ஸ்விங் வகை பந்துகளை வீசுவதில் தேர்ச்சி பெற்றவர். அவர் இதுவரை 8 டெஸ்டில் பங்கு கொண்டு 35 விக்கெட்டுகளை கை ப்பற்றி இருக்கிறார். இதன் சராசரி 21.37 ஆகும். 

இந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்காக முதலில் ஆஸி. வாரியம் சார்பில் 13 வீரர்கள் அறிவிக்கப்பட்டனர். இதில் லெவ னில் மிட்செல் ஸ்டார்க் மற்றும் ஆல்ரவுண்டர் டேனியல் கிறிஸ்டியன் இருவரும் அணியில் இடம் பெறவில்லை. 

மெல்போர்ன் டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றதால் அந் த அணியில் மாற்றம் இல்லை. அதே 11 வீரர்கள் அணியில் உள்ளனர். தேவைப்பட்டால் ஹாரிஸ் அணியில் சேர்க்கப்படுவார். இல்லாவிட்டால் மேட்சை வேடிக்கை பார்ப்பார். 

ரியான் ஹாரிஸ் மீது கேப்டன் கிளார்க்கிற்கு நல்ல நம்பிக்கை உள்ள து. அவரது தரமான ஸ்விங் பந்துகளே இதற்கு காரணமாகும். வேகப் பந்து வீச்சாளரான அவர் இலங்கை மற்றும் தென் ஆப்பிரிக்க தொடரி ல் சிறப்பாக செயல்பட்டார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்