முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தென் ஆப்பிரிக்கா - அயர்லாந்து அணிகள் இன்று மோதல்

திங்கட்கிழமை, 14 மார்ச் 2011      தமிழகம்
Image Unavailable

 

கொல்கத்தா, மார்ச். 15 - உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் கொல்கத்தாவில் இன்று நடக்க இருக்கும் லீக் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா அணியும், அயர் லாந்து அணியும் பலப்பரிட்சை நடத்த இருக்கின்றன. 10 - வது உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியா, இலங்கை மற்றும் வங்காளதேசம் ஆகிய 3 நாடுகளில் நடைபெற்று வருகிறது. பிப்ரவரி மாதம் 19 -ம் தேதி துவங்கிய இந்தப் போட்டி அடுத்தமாதம் 2 -ம் தேதி வரை நடக்கிறது. 

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் 34 -வது லீக் ஆட்டம் கொ ல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று நடக்கிறது. இதில் பி பிரி வில் உள்ள தென் ஆப்பிரிக்கா மற்றும் அயர்லாந்து அணிகள் மோது கின்றன. 

தென் ஆப்பிரிக்கா 4 ஆட்டத்தில் 3 - ல் வெற்றியும்  1 -ல் தோல்வியும் பெற்றுள்ளது. மொத்தம் 6 புள்ளிகள் பெற்றுள்ளது. அந்த அணி மே. இ. தீவு, நெதர்லாந்து, இந்தியா ஆகிய அணிகளை வென்றது. இங்கி லாந்திடம் 6 ரன்னில் தோற்றது. 

அயர்லாந்து அணி 4 ஆட்டத்தில் ஒரு வெற்றி, 3 தோல்வியுடன் 2 புள் ளி பெற்றுள்ளது. இங்கிலாந்து அணியை அதிர்ச்சிகரமாக தோற்கடித் தது. வங்காளதேசம், இந்தியா, மே.இ.தீவிடம் தோல்வி அடைந்தது. 

பேட்டிங், பந்து வீச்சு, பீல்டிங் ஆகிய 3 துறைகளிலும் சிறந்து விளங்கு தென் ஆப்பிரிக்காவுக்கு 4 -வது வெற்றி வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதி ல் வெற்றி பெற்றால் அந்த அணி கால் இறுதிக்கு தகுதி பெறும். 

தென் ஆப்பிரிக்காவின் சவாலை சமாளிக்க அயர்லாந்து கடுமையாக போராட வேண்டும். இந்தப் போட்டியில் தோற்றால் அயர்லாந்து கால் இறுதி வாய்ப்பில் இருந்து வெளியேற்றப்படும். 

உலக கோப்பையில் இரு அணிகளும் ஒரு முறை மோதியுள்ளன. இதி ல் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்றது. கொல்கத்தா மைதானத்தில் தற்போது தான் முதல் ஆட்டம் நடக்கிறது. ஸ்டேடியம் பணி முடியா ததால் இந்தியா - இங்கிலாந்து போட்டி அங்கிருந்து பெங்களூருக்கு மாற்றப்பட்டு அந்த போட்டி நடந்தது. 

கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் பிற்பகல் 2. 30 மணிக்கு நடைபெறும் இந்த ஆட்டம் ஸ்டார் கிரிக்கெட் , ஸ்டார் ஸ்போர்ட்ஸ் டெலிவிசனில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago