முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அரியானாவில் பஸ்-லாரி பயங்கரமாக மோதியதில் 9 பேர் பலி

திங்கட்கிழமை, 2 ஜனவரி 2012      இந்தியா
Image Unavailable

அரியானா, ,ஜன.- 3 - பனிமூட்டம் காரணமாக அம்பாலா நகர் அருகே பள்ளிக்குழந்தைகளை ஏற்றிச்சென்ற பஸ் ஒன்று எதிரே வந்த லாரி மீது பயங்கரமாக மோதியதில் பஸ்சில் இருந்த 9 குழந்தைகள் பலியானர் மற்றும் 20 குழந்தைகள் படுகாயம் அடைந்தனர். இந்த சம்பவம் அம்பாலா நகர் அருகே சஹா-சஹாபாத் சாலையில் நடந்துள்ளது. இது குளிர்காலமாகும். அதனால் வடமாநிலங்களில் குறிப்பாக ஜம்மு-காஷ்மீர், இமாசலப்பிரதேசம், பஞ்சாப், அரியானா, டெல்லி, உத்திரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், பீகார் ஆகிய மாநிலங்களில் கடும் குளிர் நிலவுகிறது. பனிமூட்டம் அதிகமாக இருக்கிறது. இதனால் சாலைகளில் வரும் வாகனங்களுக்கு சரியாக வெளிச்சம் ஏற்படுவதில்லை. விபத்துக்கள் அதிகம் நடந்து வருகிறது. அரியானா மாநிலத்தில் உள்ள அம்பாலா நகருக்கு அருகே உள்ள சஹா-சஹாபாத் சாலையில் நேற்றுக்காலையில் ஒரு பள்ளி பஸ்சில் குழந்தைகள் சென்றனர். பனி மூட்டம் அதிகமாக இருந்ததால் எதிரே வரும் மோட்டார் வாகனங்கள் சரியாக தெரியாமல் இருந்தது. இதனால் அந்த பஸ்ஸானது எதிரே வந்த லாரி மீது பயங்கரமாக மோதியது. விபத்தில் பலியான குழந்தைகள் அனைவரும் 5 முதல் 8 வயது வரை உள்ளவர்கள். சஹா அருகே உள்ள அர்ஜூன் பப்ளிக் பள்ளியில் படித்து வந்தவர்கள். காயம் அடைந்த குழந்தைகள் அனைவரும் அம்பாலா ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் உயரதிகாரிகள் விபத்து நடந்த இடத்திற்கு விரைவில் சென்று மீட்பு பணிகளை தீவிரப்படுத்தியதோடு தேவையான அனைத்து உதவிகளும் கிடைக்க ஏற்பாடு செய்தனர். பலியான குழந்தைகளில் 7 பேர் அடையாளம் காணப்பட்டது. பலியானவர்கள் திவ்யா, ராகுல், ரிஷப், ராவேஷ், புல்கித், ஹரீஷ் அனு என்று அடையாளம் காணப்பட்டுள்ளது.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago