முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விஞ்ஞானத்தை இணைத்து வளர்ச்சி திட்டங்களை நிறைவேற்ற வேண்டும்-பிரதமர்

செவ்வாய்க்கிழமை, 3 ஜனவரி 2012      இந்தியா
Image Unavailable

புவனேஸ்வரம்,ஜன.- 4 - நாட்டின் தேவைக்கான வளர்ச்சி திட்டங்களுடன் நவீன விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப முறையை புகுத்தி செயல்படுத்த வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங் யோசனை கூறியுள்ளார். ஒரிசா மாநில தலைநகர் புவனேஸ்வரத்தில் 99-வது இந்திய அறிவியல் மாநாடு நேற்று தொடங்கியது. 5 நாள் நடக்கும் இந்த அறிவியல் மாநாட்டை பிரதமர் மன்மோகன் சிங் நேற்று தொடங்கிவைத்து பேசினார். அப்போது அவர் கூறுகையில் நாட்டின் விரைவான வளர்ச்சிக்கு தேவையான வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்தும்போது நவீன விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப முறையை புகுத்தி செயல்படுத்தை இணைக்க வேண்டும். அதனால் திட்டம் விரைவாகவும் செம்மையாகவும் நிறைவேறும் என்றார். 12-வது ஐந்தாண்டு திட்டத்தை உருவாக்கி செயல்படுத்தும் நிலையில் இருக்கிறோம். அதில் பல பெரிய இலக்குகளை கொண்டுள்ள இந்த திட்டத்தில் விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பத்தின் பயன்பாட்டை நாம் அடைந்தே ஆக வேண்டும். தொழில் மற்றும் முக்கியத்துவம் வாய்ந்த துறை உள்பட கிராமப்புற வளர்ச்சியில் கவனத்தையும் முதலீட்டையும் அதிகரிக்க வேண்டும் என்றும் பிரதமர் மன்மோகன் சிங் கேட்டுக்கொண்டார். விஞ்ஞான ரீதியான உள்கட்டமைப்பு வசதிகளை பெருக்க வேண்டும். நாட்டின் மொத்த வருவாயில் கிரமாப்புற வளர்ச்சிக்கு மிக குறைந்த அளவே முதலீடு செய்கிறோம். இதை உடனடியாக அதிகரிக்க வேண்டும். தற்போது 0.9 சதவீதமே ஒதுக்கப்படுகிறது. இதை 12-ம் ஐந்தாண்டு திட்டத்திற்குள் 2 சதவீதமாக அதிகாரிக்க வேண்டும். இது தொழில்துறையின் வளர்ச்சியால்தான் முடியும். எரிசக்தி துறையும் இதில் முக்கியப்பங்கு வகிக்க முடியும் என்றும் மன்மோகன் சிங் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்