முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கர்நாடக சட்டசபைக்கு இடைத்தேர்தல் வருமா? தயாராகிறது காங்கிரஸ்

செவ்வாய்க்கிழமை, 3 ஜனவரி 2012      இந்தியா
Image Unavailable

பெங்களூர்,ஜன.-  4 - கர்நாடக மாநில சட்டசபைக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்படலாம் என்று கருதி காங்கிரஸ் கட்சியானது வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளது. தென்னிந்தியாவில் கர்நாடக மாநிலத்தில் மட்டும் பாரதிய ஜனதா அரசு உள்ளது. இந்த அரசு பல்வேறு ஊழல் புகார்களில் சிக்கி தவிக்கிறது. இதன் காரணமாக பா.ஜ. முதல்வராக இருந்த எடியூரப்பாவை கட்சி மேலிடம் நீக்கிவிட்டு புதிய முதல்வராக சதானந்த கவுடா பதவி ஏற்றார். இவர் எடியூரப்பாவின் ஆதரவாளராக இருந்தார். தற்போது மீண்டும் முதல்வராக எடியூரப்பா முயற்சி செய்வதாக கூறப்படுகிறது. இதனால் சதானந்தா கவுடாவுக்கும் எடியூரப்பாவுக்கும் இடையே மோதல் போக்கு உருவாகி இருக்கிறது. இதனால் கட்சிக்கு அவப்பெயர் ஏற்பட்டுவிடும் என்று கருதும் பாரதிய ஜனதா மேலிடம் கர்நாடக மாநிலத்தில் சட்டசபையை கலைத்துவிட்டு முன்கூட்டியே சட்டசபை தேர்தலை நடத்த திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது. அப்படி தேர்தல் முன்கூட்டியே நடைபெற்றால் அதை சந்திக்க காங்கிரஸ் தயாராகி வருகிறது. 224 உறுப்பினர்களை கொண்ட கர்நாடக சட்டசபைக்கு 150 வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணியில் காங்கிரஸ் மும்முரமாக ஈடுபட்டுள்ளது. வரும் மார்ச் மாதத்திற்குள் இந்த பணியை காங்கிரஸ் முடித்துவிடும் என்று தெரிகிறது. வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணியில் காங்கிரஸ் மேற்பார்வையாளர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர் என்று மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.பரமேஸ்வரா தெரிவித்துள்ளார். மொத்தம் உள்ள 224 தொகுதிகளில் 150-க்கு நாங்கள் கவனம் செலுத்தி வருகிறோம். மாநிலத்தில் தற்போது நிலவும் சூழ்நிலையை கருத்தில்கொண்டால் இந்தாண்டில் தேர்தல் உறுதியாக நடைபெறும் என்று தெரிகிறது என்று பரமேஸ்வரா மேலும் கூறினார். தற்போது காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 70 பேர் உள்ளனர்.    

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்