முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மங்களூர் விமான விபத்தில் நஷ்ட ஈடு ஏர் இந்தியாவுக்கு சுப்ரீம் கோர்ட்டு நோட்டீஸ்

செவ்வாய்க்கிழமை, 3 ஜனவரி 2012      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி, ஜன.- 4 - மங்களூரில் நடந்த விமான விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்ட ஈடு வழங்குவது தொடர்பான மனு மீது விசாரணை நடத்திய சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள்  ஏர் இந்தியா நிறுவனத்திற்கும் மத்திய அரசுக்கும் நோட்டீஸ்  அனுப்ப உத்தரவிட்டனர். கடந்த 2010-ம் ஆண்டு மே மாதம் துபாயில் இருந்து  மங்களூர் வந்த ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானதில் அதில்  பயணம் செய்த 158 பயணிகளும் பரிதாபமாக பலியானார்கள்.

இந்த 158 பேரின் குடும்பங்களுக்கும் நஷ்ட ஈடு வழங்க ஏர் இந்தியா நிறுவனம் உத்தரவிட்டது. ஆனால்  அந்த நஷ்ட ஈடு மிகவும் குறைவாக இருப்பதாக கூறி  கோர்ட்டில்  வழக்கு தொடரப்பட்டது.  இந்த வழக்கை விசாரித்த கர்நாடக கீழ்க்கோர்ட்டு ஒன்று  விபத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 75 லட்சத்தை குறைந்தபட்ச நஷ்ட ஈடாக வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டது.  ஆனால் இதை எதிர்த்து  கர்நாடக ஐகோர்ட்டில்  அப்பீல் செய்யப்பட்டது. இந்த அப்பீல் மீது விசாரணை நடத்திய  ஐகோர்ட்டு குறைந்தபட்ச நஷ்ட ஈடாக தலா ரூ. 75 லட்சம் வழங்க வேண்டும் என்ற கீழ்க்கோர்ட்டின்  உத்தரவை தள்ளுபடி செய்தது.

ஐகோர்ட்டின் இந்த உத்தரவை எதிர்த்து  முகம்மது ரபீர்  சலாம் என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்தார். 

முகம்மது ரபீக்கின் மகன் இந்த விமான விபத்தில் பலியானார்.

ரபீக்கின் மகன் துபாயில் வேலை பார்த்து வந்தார்.  தனது சகோதரிக்கு திருமணம் நடந்த ஒரு மாதத்திற்கு பிறகு  ரபீக்கின் மகன்  துபாயிலிருந்து  மங்களூர் திரும்பிய போதுதான் இந்த பயங்கர விபத்து நடந்தது. இதில் ரபீக்கின் மகன் உள்ளிட்ட 158 பேர் உடல் கருகி  பலியானார்கள்.

ரபீக்கின் சார்பில் வாதாடிய அவரது வக்கீல்   ஹரீஷ் சால்வே, விமான விபத்தில் பலியானவர்களுக்கு நஷ்ட ஈடு வழங்குவது தொடர்பாக மாண்ட்ரீல் உடன்படிக்கை  ஒன்றை சுட்டிக்காட்டினார். 

இந்த உடன்பாட்டில் இந்தியாவும் கையெழுத்திட்டுள்ளது. இந்த உடன்படிக்கையின்படி பார்க்கும்போது விமான விபத்தில் பலியானவர்களின்  குடும்பங்களுக்கு  குறைந்தபட்ச நஷ்ட ஈடாக ரூ. 75 லட்சம்  வழங்க வேண்டும் என்றும்  ஹரீஸ் சால்வே விளக்கினார்.

இந்த மனு மீது விசாரணை நடத்திய நீதிபதி  தல்வீர்  பண்டாரி தலைமையிலான சுப்ரீம் கோர்ட்டு டிவிஷன்  பெஞ்ச் இது தொடர்பாக பதில் அளிக்குமாறு  மத்திய  அரசுக்கும் ஏர் இந்தியா நிறுவனத்திற்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.

மேலும் இந்த வழக்கு விசாரணையை வரும் ஏப்ரல் மாதத்திற்கு  டிவிஷன் பெஞ்ச் ஒத்திவைத்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago