முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிட்னி கிரிக்கெட் இந்தியா 191 ரன்னில் ஆல்அவுட் ஆஸ்திரேலிய பந்து வீச்சு அபாரம்

புதன்கிழமை, 4 ஜனவரி 2012      விளையாட்டு
Image Unavailable

சிட்னி, ஜன. - 4  - ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக சிட்னியில் நடைபெற்று வரும் 2-வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்சில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 191 ரன்னில் ஆல்அவுட்டானது.  இந்தப் போட்டியில் இந்திய அணி தரப்பில் கேப்டன் தோனி அரை சதம் அடித்தார். டெண்டுல்கர், சேவாக், மற்றும் கோக்லி ஆகியோர் சிறிது தாக்குப் பிடித்து ஆடினர். மற்ற வீரர்கள் குறைந்த ரன்னில் ஆட்டம் இழந்தனர்.  ஆஸ்திரேலிய அணியின் இளம் பந்து வீச்சாளர்கள் இந்தப் போட்டியி லும் சிறப்பாக பந்து வீசி வருகின்றனர். பட்டின்சன், ஹில்பென்ஹா ஸ் மற்றும் சிட்லே ஆகியோரின் பந்து வீச்சு குறிப்பிடத்தக்க வகையில் இருந்தது.  இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான 2-வது கிரிக்கெட் டெஸ்ட்போட்டி சிட்னியில் உள்ள கிரிக்கெட் மைதானத்தி ல் நேற்று துவங்கியது. இதில் டாசில் வெற்றி பெற்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்திய அணி தரப்பில், சேவாக் மற்றும் காம்பீர் இருவரும் ஆட்டத் தை துவக்கினர். ஆனால் முதலில் களம் இறங்கிய இந்திய அணி முதல் டெஸ்ட் போல இதிலும் ரன் எடுக்க தடுமாறியது.  இறுதியில் இந்திய அணி 59.3 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 191 ரன்னை எடுத்தது. இந்திய அணி சார்பில் ஒரு வீரர் அரை சதமு ம், 2 வீரர்கள் கால் சதமும் அடித்தனர். மற்ற வீரர்கள் சொதப்பி விட்டனர்.
கேப்டன் தோனி அதிகபட்சமாக, 77 பந்தில் 57 ரன்னை எடுத்து இறுதி வரை ஆட்டம் இழக்காமல் இருந்தார். இதில் 8 பவுண்டரி அடக்கம். சேவாக் 51 பந்தில் 30 ரன்னை எடுத்தார். இதில் 4 பவுண்டரி அடக்கம்.  டெண்டுல்கர் 89 பந்தில் 41 ரன்னை எடுத்தார். இதில் 8 பவுண்டரி அட க்கம். இறுதியில் அவர் பட்டின்சன் வீசிய பந்தில் கிளீன் போல்டானா ர். தவிர, விராட் கோக்லி 41 பந்தில் 23 ரன்னையும், அஸ்வின் 39 பந்தி  ல் 20 ரன்னையும் எடுத்தனர்.  ஆஸ்திரேலிய அணி தரப்பில், வேகப் பந்து வீச்சாளர் பட்டின்சன் 43 ரந்னைக் கொடுத்து 3 விக்கெட் எடுத்தார். ஹில்பென்ஹாஸ் 51 ரன்னைக் கொடுத்து 3 விக்கெட் எடுத்தார். சிட்னே 55 ரன்னைக் கொடுத்து 3 விக்கெட் எடுத்தார்.  பின்பு முதல் இன்னிங்சைத் துவக்கிய ஆஸ்திரேலிய அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில், 26 ஓவரில் 3 விக்கெட்டை இழந்து 116 ரன்னை எடுத்து இருந்தது. அப்போது முன்னாள் கேப்டன் பாண்டிங் 62 பந்தில் 44 ரன்னுடனும் (5 பவுண்டரி), கேப்டன் மைக்கேல் கிளார்க் 59 பந்தி ல் 47 ரன்னுடனும்(7 பவுண்டரி) களத்தில் இருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்