முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னைத் தீவுத்திடல் சுற்றுலாப் பொருட்காட்சி தொடங்கியது

புதன்கிழமை, 4 ஜனவரி 2012      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஜன.- 4 - தானே புயலால் பொருட்காட்சி வேலைகள் சுணக்கம் கண்டதால் டிசம்பர் இறுதியில் துவங்க வேண்டிய சென்னைத் தீவுத்திடல் சுற்றுலா பொருட்காட்சி நேற்று மாலை  தொடங்கியது. இது பிப்ரவரி மாதம் வரை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சுற்றுலாத்துறை அமைச்சர் கோகுல இந்திரா பொருட்காட்சியை தொடங்கி வைத்தர். சுற்றுலாத்துறை முதன்மை செயலாளர் ஜெயக்கொடி, தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழக ஆணையர் ஜவகர் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். பொருட்காட்சியின் முகப்பு தோற்றம மாமல்லபுரம் சிற்பம், கங்கை கொண்ட சோழபுரம் கோவில், கைலாசநாதர் கோவில் ஆகியவற்றின் நிலையான தோற்றத்தை பிரதிபலிக்கும் வகைகளில் அமைக்கப்பட்டுள்ளது. பொருட்காட்சியில் மத்திய, மாநில அரசு துறைகள், நிறுவனங்களின் 40 அரங்குகளும், தனியார் கடைகள் 120​ம் இடம் பெறுகின்றன. சிறுவர்களை மகிழ்விக்க 40 பொழுதுபோக்கு அம்சங்கள், வீட்டு உபயோக பொருட்கள், ரெடிமேடு துணிக்கடைகள், அழகு சாதன பொருட்கள் உள்ளிட்ட அனைத்து பொருட்களின் சிறு கடை களும் பங்கேற்கின்றன.தினமும் இரவு 7 மணி முதல் கலைநிகழ்ச்சிகள் நடக் கின்றன. மேலும் தமிழ்நாடு ஓட்டல் சார்பாக பல்வேறு விதமான உணவு வகைகள் தயாரித்து வழங்கப்படுகின்றன.

பொருட்காட்சி பிற்பகல் 3 மணி முதல் இரவு 10 மணி வரை நடைபெறும். பெரியவர்களுக்கு ரூ.15, சிறியவர்களுக்கு ரூ.10 என கடந்த ஆண்டு நிர்ணயிக்கப்பட்ட நுழைவு கட்டணமே வசூலிக்கப்படுகிறது.

ஞாயிற்றுக்கிழமை மற்றும் அரசு விடுமுறை நாட்களில் காலை 11 மணி முதல் பொருட்காட்சி செயல்படும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago