முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழக மீனவர் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காணப்படும்-ஞானதேசிகன்

புதன்கிழமை, 4 ஜனவரி 2012      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஜன. - 4 - பொங்கல் பண்டிகைக்கு பிறகு தமிழக மீனவர் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் மேலும் கூறியதாவது,  தமிழ்நாடு விசைப்படகு மீனவர் சங்க பிரதிநிதிகளுடன் சென்னை வந்திருந்த பிரதமரை சந்தித்து பேசினோம். இலங்கை கடற்படையால் தாக்கப்படும் போதும், மற்ற பிரச்சினைகளின் போதும் மீனவர்கள் தொடர்பு கொள்ள வசதியாக தனி அதிகாரி ஒருவரை நியமிக்க வேண்டும். கச்சத்தீவை மீட்கும் வரை அதனை இந்திய அரசு குத்தகைக்கு எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்தோம். அப்போது உடனிருந்த தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன், பிரச்சினைகளின் போது மீனவர்கள் தொடர்பு கொள்ள வசதியாக தனி அதிகாரி விரைவில் நியமனம் செய்யப்படுவார் என்று உறுதியளித்தார். இலங்கை தமிழக மீனவ சங்கங்களின் பிரதிநிதிகள் ஏற்கனவே சந்தித்து பேசியுள்ளனர். எனவே விரைவில் தமிழக மீனவர்கள் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும் நம்புகிறேன். முல்லைப் பெரியாறு பிரச்சினையில் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வரும் வரை இரு மாநிலங்களும் காத்திருக்க வேண்டும் என்பதுதான் தமிழக காங்கிரசின் நிலை. தானே புயலால் பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் இயல்பு நிலை திரும்ப மத்திய, மாநில அரசுகள் இணைந்து பணியாற்ற வேண்டும் என்றார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்