முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கடலூர் மாவட்ட மக்களுக்குஜெயலலிதா நேரில் நிவாரணம் உதவிகளை வழங்கினார்

புதன்கிழமை, 4 ஜனவரி 2012      தமிழகம்
Image Unavailable

கடலூர், ஜன.- 5 - தானே புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்ட மக்களுக்கு முதல்வர் ஜெயலலிதா நேற்று நேரில் நிவாரண உதவிகளை வழங்கினார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்கப்படும் என்றும் முதல்வர் ஜெயலலிதா உறுதி அளித்தார்.  தானே புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட முதல்வர் ஜெயலலிதா ஹெலிகாப்டர் மூலம் கடலூருக்கு மதியம் 2.39 மணியளவில் வந்து சேர்ந்தார். அங்கிருந்தவாறு ஹெலிகாப்டர் மூலம் வெள்ளத்தால் பாதித்த பகுதிகளை பார்வையிட்டார். இதன் பிறகு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 25 பேருக்கு நிவாரண உதவிகளை வழங்கினார். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு 2 லட்ச ரூபாயும், வீடுகள் சேதமடைந்தவர்கள் குடும்பங்களுக்கு 5 ஆயிரம் ரூபாய், 10 கிலோ அரிசியும், கால்நடை இழந்தவர்களுக்கு20 ஆயிரம் ரூபாயும், முந்திரி, பலா ஆகியவை சேதமடைந்ததற்கு ஹெக்டேருக்கு 9 ஆயிரம் ரூபாயும், படகுகள் சேதமடைந்ததற்கு 75 ஆயிரம் ரூபாய்க்கான காசோலைகளை வழங்கி புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறினார். இதன் பின்னர் அங்கிருந்தர்கள் மத்தியில் பேசிய முதல்வர் ஜெயலலிதா, மக்களுக்கு அனைத்து உதவிகளை அரசு வழங்கும். தானே புயலால் கடலூர் மாவட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. புயலால் பாதித்த மக்களுக்கு தேவையான நிவாரண பொருட்களை உடனடியாக வழங்க மாவட்ட நிர்வாகம் முடுக்கி விடப்பட்டுள்ளது. குடிநீnullர், சாலை, மின்சாரம் போன்ற வசதிகளை செய்து தர 850 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனைத்து உதவிகளும் செய்யப்படும். நெல், பயிர்கள், மாடு, ஆடுகளை இழந்த மக்கள் எதற்கும் கவலைப்பட வேண்டும். மக்களுக்கு உதவ அரசு தயாராக உள்ளது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு மறுவாழ்வு அமைத்து தரவும் அரசு தயாராக உள்ளது. மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்யப்படும். புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஒளிமயமான எதிர்காலம் காத்திருக்கிறது என கூறிய முதல்வர், மக்களுக்கு புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டார். நிகழ்ச்சியில் அமைச்சர் மு.சி.சம்பத், மாவட்ட ஆட்சித் தலைவர் அமுதவள்ளி ஆகியோரும் உடன் இருந்தனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்