முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அண்ணா ஹசாரேயின் உடல்நிலை ஸ்திரமாக இருக்கிறது: டாக்டர்கள் தகவல்

புதன்கிழமை, 4 ஜனவரி 2012      ஊழல்
Image Unavailable

புனே,ஜன.- 5 - பிரபல சமூக ஆர்வலரும் காந்தீயவாதியுமான அண்ணா ஹசாரேயின் உடல்நிலை ஸ்திரமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். பாராளுமன்றத்தில் பலமான லோக்பால் மசோதாவை வலியுறுத்து கடந்த 27-ம் தேதி மும்பையில் 3 நாள் உண்ணாவிரதத்தை தொடங்கினார். அதனால் அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டது. உடனடியாக அவர் புனே நகரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலையை பரிசோதித்த டாக்டர்கள், பூரண ஓய்வு எடுக்க வேண்டும் என்று ஹசாரேவுக்கு ஆலோசனை கூறினர். ஹசாரேயின் நெஞ்சுப்பகுதி மற்றும் ரதத சோதனை நடத்தப்பட்டது. அதில் அவருக்கு எந்தவித பாதிப்பும் இருப்பதாக தெரியவில்லை. எல்லாம் சரியாக இருக்கிறது. ஹசாரே இரவு நேரத்தில் நல்ல முறையில் தூங்குகிறார். எதிர்பார்த்தபடி அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. மருத்துவமனையில் இருந்து வரும் ஞாயிற்றுக்கிழமை டிஸ்ஜார்ஜ் செய்யப்படுவார் என்று மருத்துவமனை டாக்டர் பாரக் சன்செதி நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் தெரிவித்தார். ஹசாரே முழு ஓய்வு எடுக்க வேண்டியதிருப்பதால் அவரை பார்க்க யாரும் அனுமதிக்கப்படுவதில்லை.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago