முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மத்திய பிரதேசத்தில் பசு வதை தடை சட்டம்: ஜனாதிபதி ஒப்புதல்

புதன்கிழமை, 4 ஜனவரி 2012      இந்தியா
Image Unavailable

 

போபால், ஜன. - 5 - மத்திய பிரதேச மாநிலத்தில் பசு வதை தடை சட்டத்துக்கு ஜனாதிபதி பிரதீபா பாட்டீல் ஒப்புதல் அளித்துள்ளார். இதன் மூலம் பசுக்களை கொல்வோருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதிக்க புதிய சட்டம் வகை செய்கிறது.  பசு வதை தடை சட்டத்துக்கு ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு 2010 ம் ஆண்டு மத்திய பிரதேச அரசு அனுப்பியிருந்தது. அதற்கு இப்போதுதான் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஜனாதிபதியின் ஒப்புதல் கிடைத்ததை தொடர்ந்து இந்த சட்டம் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளதாக மாநில அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  பசுக்களை காப்பதற்காக மத்திய பிரதேச சட்டசபையில் 2010 ம் ஆண்டு மசோதா நிறைவேற்றப்பட்டது. ஏற்கனவே உள்ள 2004 ம் ஆண்டு சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டது. முந்தைய சட்டத்தை மேலும் கடுமையாக்கும் வகையில் புதிய சட்டம் வடிவமைக்கப்பட்டிருந்தது. பசுக்களை கொல்வோருக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும், ரூ. 5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்று முன்பிருந்த சட்டம் திருத்தப்பட்டுள்ளது. இதன்படி 7 ஆண்டு சிறை தண்டனையும் அபாரத தொகையை நீதிமன்றம் தீர்மானித்து கொள்ளவும் புதிய சட்டம் வகை செய்கிறது. பசுக்களை கொல்வதற்காக வாகனங்களில் ஏற்றி செல்வோர், பசுக்களை வாங்கி விற்கும் ஏஜண்ட் உள்ளிட்ட அனைவருமே குற்றவாளிகளாக கருதப்பட்டு அதிகபட்ச தண்டனை விதிக்க சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.  பசுவதை தடை சட்ட மசோதா செப்டம்பர் 3, 2010 ல் மாநில அரசு சார்பில் மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பப்பட்டது. உள்துறை அமைச்சகம் ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அனுப்பியது. இதற்கு டிசம்பர் 22 ம் தேதி ஜனாதிபதி ஒப்புதல் அளித்தார். அது மாநில அரசிதழில் டிசம்பர் 31 ம் தேதி வெளியிடப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்