முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

லோக்பால்: கூட்டணியில் அங்கம் வகிக்கிறோம் -மம்தா ஆவேச பேட்டி

புதன்கிழமை, 4 ஜனவரி 2012      இந்தியா
Image Unavailable

கொல்கத்தா, ஜன. - 5 - லோக்பால் மசோதா குறித்து அனைத்து கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி ஒருமித்த கருத்தை ஏற்படுத்த மத்திய அரசு முன்வர வேண்டும். கூட்டணியில் அங்கம் வகிக்கிறோம் என்பதற்காக மத்திய அரசின் அனைத்து நடவடிக்கைகளையும் நாங்கள் ஏற்றுக் கொண்டதில்லை. கொள்கை முடிவுகளையும், செயலையும் துணிச்சலுடன் எதிர்த்திருக்கிறோம்  என்று மேற்கு வங்க முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி தெரிவித்தார். கொல்கத்தாவில் தலைமை செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த மம்தா கூறியதாவது, லோக் ஆயுக்தாவை அமைப்பது தொடர்பாக லோக்பால் மசோதாவில் இடம் பெற்றுள்ள அம்சம் மாநிலங்களின் அதிகாரத்தில் மத்திய அரசு தலையிடுவது போல் உள்ளது. இதனால் அதில் திருத்தங்களை கொண்டு வர வேண்டும் என்று எங்கள் கட்சி உறுப்பினர்கள் மக்களவையில் குரல் எழுப்பினர். இதை மத்திய அரசும் ஏற்றுக் கொள்வதாக அறிவித்தது.  ஆனால் மக்களவையில் மசோதா தாக்கல் செய்யப்பட்ட போதுதான் தெரிந்தது எங்களது கோரிக்கை பரிசீலிக்கப்படவில்லை என்பது. இதனால்தான் எங்களது நிலைப்பாட்டில் நாங்கள் தீவிரம் காட்ட வேண்டியதிருந்தது.  மாநிலத்தின் முதல்வர் என்ற முறையில் சிறப்பான லோக் ஆயுக்தாவை அமைக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். ஆனால் இதில் மத்திய அரசின் மாதிரியை பின்பற்ற முடியாது. இதனால் இந்த விஷயத்தில் மாநில அரசுகளை மத்திய அரசு நிர்ப்பந்திக்க கூடாது. இதில் அனைத்து மாநில அரசுகளின் நிலைப்பாடு என்னவோ அதுவே எங்களது நிலைப்பாடு. காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசுடன் நான் உடன்பாடு செய்து கொண்டதாக சிலர் பிரச்சாரம் செய்கின்றனர். இதில் துளியும் உண்மையில்லை. கூட்டணியில் அங்கம் வகிக்கிறோம் என்பதற்காக மத்திய அரசின் அனைத்து நடவடிக்கைகளையும் நாங்கள் ஏற்றுக் கொண்டதில்லை. கொள்கை முடிவுகளையும், செயலையும் துணிச்சலுடன் எதிர்த்திருக்கிறோம் என்றார் மம்தா.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்