முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்கா - ஈரான் பிரச்சினை: கச்சா எண்ணெய் விலை உயருகிறது

வியாழக்கிழமை, 5 ஜனவரி 2012      இந்தியா
Image Unavailable

புது டெல்லி, ஜன. - 5 - அமெரிக்கா - ஈரான் இடையே பிரச்சினை ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை உயர்கிறது.  ஈரான் அணுகுண்டு தயாரிப்பதாக குற்றம் சாட்டி அதன் மீது அமெரிக்கா உள்ளிட்ட மேலை நாடுகள் பொருளாதார தடை விதித்துள்ளன. இதனால் இரு நாடுகளுக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டுள்ளது.  இந்த நிலையில் வளைகுடாவில் உள்ள ஓமன் கடல் பகுதியில் உள்ள ஹேர்முஸ் கடற்படை தளத்தில் 10 நாள் போர் பயிற்சி ஒத்திகை நடத்தியது. அப்போது ஈரான் போர்க் கப்பலில் இருந்த குறைந்த தூரம், நீண்ட தூரம் சென்று தாக்கும் ஏவுகணைகளை வெற்றிகரமாக ஏவி சோதனை நடத்தியது. போர் ஒத்திகை நடந்ததால் அமெரிக்க போர்க் கப்பல்கள் அந்த வழியாக செல்ல விரும்பவில்லை.  இந்த நிலையில் அமெரிக்க போர்க் கப்பல்கள் திரும்பவும் நுழையக் கூடாது. மீறினால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என ஈரான் கடும் எச்சரிக்கை விடுத்தது. இந்த பிரச்சினையால் சர்வதேச அளவில் கச்சா எண்ணெய்யின் விலை உயரும் அபாயம் உள்ளது. ஏனெனில் ஹேர்முஸ் துறைமுகம் வழியாக நாள் ஒன்றுக்கு ஒரு கோடியே 70 லட்சம் பேரல்கள் கச்சா எண்ணெய் கப்பல்கள் மூலம் கொண்டு செல்லப்படுகிறது.  தற்போது இந்த வழி அடைக்கப்பட்டுள்ளதால் கச்சா எண்ணெய் எடுத்து செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதனால் எண்ணெய் தட்டுப்பாடு ஏற்பட்டு அதன் மூலம் விலை உயர்வு ஏற்படும் அபாயம் உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்