முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தேர்தல் பார்வையாளர்கள் அடுத்த வாரம் தமிழகம் வருகை

செவ்வாய்க்கிழமை, 15 மார்ச் 2011      தமிழகம்
Image Unavailable

சென்னை, மார்ச் 15 - தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலின்போது பண விநியோகத்தை கண்காணிக்க தனிக் கவனம் செலுத்த வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதனிடையே பொதுப்  பார்வையாளர்கள் அடுத்த வாரம் தமிழகத்திற்கு வரவுள்ளதாக ஆணைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் முன்எப்போதும் இல்லாத அளவுக்கு ஆணையம் கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. வாக்காளர்களுக்கு இப்போதே பண விநியோகம் செய்யப்படுவதாக புகார்கள் எழுந்தன. இதையடுத்து சென்னை, கோவை, சேலம், மதுரை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் வெளி மாநிலங்களை சேர்ந்த உயர் அதிகாரிகள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளனர். அவர்கள் அளிக்கும் தகவலின்படி பொதுப் பார்வையாளர்களை ஆணையம் நியமிக்கும். இரண்டு தொகுதிகளுக்கு ஒரு பொதுப் பார்வையாளரை நியமிப்பது வழக்கமான முறை. ஆனால் தற்போது தேர்தல் நடத்தை விதிகளை அமுல் படுத்துவதில் ஆணையம் தீவிர கவனம் செலுத்துவதால், ஒரு தொகுதிக்கு ஒரு பார்வையாளரை நியமிக்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தேர்தல் ஆணையத்தின் உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், தேர்தல் நடைபெற உள்ள 5 மாநிலங்களுக்கும் சேர்த்து நூற்றுக்கணக்கில் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதில் எத்தனைபேர் தமிழகத்திற்கு என்பதை தேர்தல் ஆணையம்தான் முடிவு செய்யும். வேட்புமனுக்கள் பரிசீலனைக்கு முன்னதாகவே பார்வையாளர்கள் தமிழகத்திற்கு வருவார்கள் என்று கூறினார். இந்திய தலைமை தேர்தல் ஆணையாளர் எஸ்.ஒய்.குரேஷி நேற்று இதர ஆணையாளர்கள் சம்பத், பிரம்மம் ஆகியோருடன் சென்னை வந்திருந்தார். தேர்தல் நிலவரங்களை ஆராய்ந்த பிறகு எத்தனைபேரை பொதுப் பார்வையாளர்களாக நியமிப்பது என்பதை அவர்கள் முடிவு செய்வார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்