முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தொண்டு நிறுவனங்கள் - வெளியாட்களை கண்காணிக்க உத்தரவு

செவ்வாய்க்கிழமை, 15 மார்ச் 2011      தமிழகம்
Image Unavailable

 

மதுரை,மார்ச்.15 - சட்டமன்ற தேர்தலையொட்டி தொண்டு நிறுவனங்கள் மற்றும் வெளியாட்களை கண்காணிக்கவும் தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.   தமிழக சட்டசபை தேர்தல் ஏப் 13 ம் தேதி நடக்கிறது.இதற்கான தீவிர ஏற்பாடுகளை தேர்தல் கமிஷன் செய்து வருகிறது. தினந்தோறும் அதிரடி உத்தரவுகளை பிறப்பித்து வருகிறது. தேர்தல்  ஆணையத்தின் இந்த உத்தரவுகளால் அரசியல் கட்சியினர் ஆடிப்போய் உள்ளனர். இந்த நிலையில் மாநிலம்  முழுவதும் பெண்கள் மற்றும் ஆண்களை சுய உதவி  குழுக்கள் இயங்கி வருகின்றன. இவற்றுக்கு அரசு சலுகைகள் பெற்று தருவது முதல் பல்வேறு உதவிகளை தொண்டு நிறுவனங்கள் செய்து வருகின்றன. இந்த தொண்டு நிறுவனங்கள் மூலம் அரசியல் கட்சிகள்பணப்பட்டுவாடா செய்து விடலாம் என தேர்தல் கமிஷனுக்கு தற்போது தெரியவந்து உள்ளது. இதையடுத்து மாநிலம் முழுவதும் உள்ள தொண்டு நிறுவனங்களை கண்காணிக்க தேர்தல ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

  இந்த உத்தரவையடுத்து சிஐடி போலீசார் கிராமம்,நகராட்சி, மாநகராட்சிகளில் இயங்கி வரும் தொண்டு நிறுவனங்களை கண்காணிக்க துவங்கி உள்ளது. இதே போல், முக்கிய நகரங்களில் உள்ள தங்கும் விடுதிகள், சமுதாயகூடங்களை சோதனை நடத்திய போலீசார் அங்கு அறிமுகம் இல்லாத நபர்கள், வெளியூரை சேர்ந்தவர்கள் தங்கி இருந்தால் அவரை போலீசார் விசாரணைக்கு உட்படுத்தி வருகிறார்கள். இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில் தேர்தல் உத்தரவை அடுத்து முழுக்க முழுக்க தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறோம் தேர்தல் முடியும் வரை லாட்ஜ்,சமுதாய கூடங்கள்,ஊருக்கு ஒதுக்கு புறமாக பங்களாக்களில் அதிரடி சோதனைசெய்வோம். புது நபர்கள் யாரேனும் தென்பட்டால் தேர்தல் அதிகாரிகளையோ, போலீசாரையோ பொதுமக்கள் அணுகும் படி கேட்டுக்கொள்கிறோம் என்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago