முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மே.வ.த்தில் தொழில் தொடங்க தயார்: ரத்தன் டாடா

வெள்ளிக்கிழமை, 6 ஜனவரி 2012      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி,ஜன.6 - எங்களுக்கு சாதகமான சூழ்நிலையை ஏற்படுத்திக்கொடுத்தால் நாங்கள் மீண்டும் மேற்குவங்காளத்திற்கு சென்று தொழில் ஆரம்பிக்க தயாராக இருக்கிறோம் என்று டாடா மோட்டார் கம்பெனி தலைவர் ரத்தன் டாடா திடீரென்று அறிவித்துள்ளார். மேற்குவங்க மாநிலம் சிங்கூரில் டாடா மோட்டார் கம்பெனி சார்பாக நானோ கார் தொழிற்சாலை தொடங்கப்பட்டது. இதற்கான நிலம் ஆர்ஜிதம் செய்யப்பட்டு நானோ மோட்டார் கம்பெனி கட்டுமான பணிகள் தொடங்கும் நிலையில் இருந்தது. விவசாய நிலம் கையகப்படுத்தப்பட்டதாகவும் அவைகள் குறைந்த விலைக்கு வாங்கப்பட்டதாகவும் கூறி நானோ மோட்டார் தொழிற்சாலையை தொடங்கக்கூடாது என்று கூறி திரிணாமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி போராட்டத்தை தொடங்கினார். இதனால் பெரும் பிரச்சினை உருவானது. இதனைத்தொடர்ந்து சிங்கூரில் நானோ மோட்டார் தொழிற்சாலை அமைக்கும் திட்டத்தை ரத்தன் டாடா கைவிட்டார். அங்கிருந்து குஜராத் மாநிலத்திற்கு சென்று நானோ மோட்டார் உற்பத்தி தொழிற்சாலையை தொடங்கியுள்ளார். மேற்குவங்காளத்தில் இந்த தொழிற்சாலை அமைக்கப்படாததோடு அந்த மாநிலத்தில் இடது கம்யூனிஸ்ட் தலைமையிலான இடதுசாரி கூட்டணி அரசானது தேர்தலில் தோல்வி அடைய இந்த பிரச்சினை முக்கிய காரணமாக அமைந்துவிட்டது. 

இந்தநிலையில் ரத்தன் டாடா நேற்று டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில் மேற்குவங்க மாநிலத்தில் எங்களுக்கு ஒரு சாதகமான சூழ்நிலையை அரசு ஏற்படுத்திக்கொடுத்தால் அங்கு நாங்கள் மீண்டும் சென்று நானோ தொழிற்சாலையை தொடங்க தயாராக இருக்கிறோம். மேற்குவங்க மாநிலம் வர்த்தகத்திற்கு ஏற்ற மாநிலமாக இருக்கிறது. மேலும் ஒரு மையமான இடத்தில் இருப்பதால் வர்த்தகத்திற்கு ஏற்றதாக இருக்கிறது என்றார். சிங்கூரில் நாங்கள் தொழில் தொடங்க போட்டி கம்பெனியாளர்கள்தான் எங்களுக்கு இடையூறை ஏற்படுத்திக்கொடுத்தனர். அந்த கம்பெனிகள் எவை எவை என்று சரியான நேரம் வரும்போது கூறுவோம் என்றும் ரத்தன் டாடா தெரிவித்தார். சிங்கூரில் வெறும் 2 ஆயிரத்து 500 டாலருக்கு கார் தயாரிக்கும் தொழிற்சாலையை டாடா கம்பெனி தொடங்க இருந்தது. இதற்கு அனுமதித்திருந்தால் கடந்த 2008-ம் ஆண்டே உற்பத்தி தொடங்கியிருக்கும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்