முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முல்லை பெரியாறு அணை பலம் குறித்து இறுதி ஆய்வு

வெள்ளிக்கிழமை, 6 ஜனவரி 2012      அரசியல்
Image Unavailable

 

கம்பம், ஜன.6 - முல்லைப் பெரியாறு அணையின் உறுதித் தன்மையை பரிசோதிக்கும் இறுதிக் கட்ட ஆய்வை பொறியாளர்கள் மேற்கொண்டுள்ளனர். முல்லைப் பெரியாறு அணையின் பலம் குறைவாக உள்ளது என்றும் அதனால் புதிய அணை கட்டியே தீருவோம் என்று கேரளா உறுதியாக கூறிவருகிறது. இதனால் தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பான நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் முல்லைப் பெரியாறு அணையின் உறுதித் தன்மையை கண்டறிய ஏற்கனவே சுப்ரீம் கோர்ட்டால் நியமிக்கப்பட்ட ஓய்வுபெற்ற நீதிபதி ஆனந்த் தலைமையிலான உயர்நிலைக் குழுவினர் ஆய்வு செய்து வருகின்றனர். அணையின் உறுதி தன்மையை கண்டறியும் இறுதி சோதனையை உயர்நிலைக் குழுவின் கண்காணிப்பில் மகாராஷ்ட்ர மாநில அரசின் தபோடி வொர்க்ஷாப் முதுநிலை பொறியாளர் சாங்கிலி, பொறியாளர் பிரசித் ஆகியோர் தலைமையில் 4 தொழில் நுட்பக் குழுவினர் நேற்று முன்தினம் அணை பகுதியில் மேற்கொண்டனர். இவர்கள் அணை கட்டப் பயன்படுத்திய சுருக்கி கலவை எனப்படும் சுண்ணாம்பு, கருப்பட்டி, இஞ்சி,  கடுக்காய், தேக்கு இலை கலைவை குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.  மேலும் இவர்கள் அணையை பல்வேறு கட்டங்களிலும் மாதிரிகளை எடுத்து ஆராய்ந்து வருகிறார்கள். இதேபோல பேபி அணையிலும் இவர்கள் இத்தகைய ஆய்வை மேற்கொண்டுள்ளனர். இவர்கள் சில வாரங்கள் அணைப்பகுதியில் தங்கி இந்த ஆய்வுகளை மேற்கொள்ள இருக்கிறார்கள். இதனால் இவர்கள் தங்கும் அறைகளை தமிழக பொதுப்பணித் துறையினர் தயார் செய்து கொடுத்துள்ளனர். 

இந்த ஆய்வுக் குழுவினர் தங்களது ஆய்வுகளை விரைந்து முடித்து, கலவை மாதிரிகளையும் மத்திய மணல் மற்றும் பொருட்கள் ஆராய்ச்சி நிறுவனத்திடம் ஒப்படைப்பார்கள் என்று தெரிகிறது. இந்த ஆய்வின்போது தமிழகத்தின் சார்பில் முல்லைப் பெரியாறு அணையின் செயற்பொறியாளர் ராஜேஷ், உதவி கோட்ட பொறியாளர் கல்யாணசுந்தரம், உதவி பொறியாளர்கள் ராஜகோபால், மயில்வாகனன் ஆகியோரும், கேரளத்தின் சார்பில் நீர்ப்பாசன துறை செயலாளர் டோமி ஜார்ஜும் இருந்தனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago