முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உதயநிதி ஸ்டாலின் கமிஷர் அலுவலகத்தில் ஆஜர்

வெள்ளிக்கிழமை, 6 ஜனவரி 2012      அரசியல்
Image Unavailable

 

சென்னை, ஜன.6 -  சென்னை போலீஸார் பதிவு செய்துள்ள நிலமோசடி வழக்கு தொடர்பாக சென்னை சைதாப்பேட்டை பெருநகர நீnullதிமன்றத்தின் உத்தரவுப்படி முன்னாள் துணை முதல்வர் மு.க.ஸ்டாலினின் மகனும், திரைப்படத் தயாரிப்பாளருமான உதயநிதி ஸ்டாலின் நேற்று செனை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஆஜராகி கையெழுத்திட்டார். இது குறித்த விபரம் வருமாறு:- .சென்னை ஆழ்வார்பேட்டை செயின்ட் மேரீஸ் ரோட்டை சேர்ந்தவர் தொழில் அதிபர் என்.எஸ்.குமார் என்ற சேஷாத்திரி குமார் (வயது64). இவரது தந்தை காலஞ்சென்ற நாராயணசாமி. சுதந்திர போராட்ட வீரர்.

ஆழ்வார்பேட்டை சித்தரஞ்சன் சாலையில் சேஷாத்திரி குமாருக்கு சொந்தமான 2.1/2 கிரவுண்ட் நிலத்தில் 4445 சதுர அடியில் வீடு இருந்தது. இந்த வீட்டை வாடகைக்கு விட்டிருந்தார். இவர்களுக்கு சொந்தமான 6 கிரவுண்ட் நிலத்தை கருணாநிதியின் மகன் மு.க.ஸ்டாலின் வங்கி மூலம் வாங்கி அதில் குடியேறினார். அதன் பிறகு வீட்டுக்கு அருகில் உள்ள சேஷாத்திரி குமாருக்கு சொந்தமான ரூ.5.1/2 கோடி மதிப்புள்ள வீட்டை கட்டாயப்படுத்தி மிரட்டி விலைக்கு வாங்கி கொண்டதாக சேஷாத்திரி குமார் கடந்த நவம்பர் மாதம் 29-ம் தேதி சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் கொடுத்தார்.

அந்தப் புகாரில், மு.க.ஸ்டாலின், அவருடைய மகன் உதயநிதி, ஸ்டாலினின் கூட்டாளிகள் வேணுகோபால்ரெட்டி, ராஜாசங்கர், சுப்பாரெட்டி, சீனிவாசன் ஆகியோர் மீதும் புகார் கொடுத்திருந்தார். சீனிவாசன் என்பவர் வீட்டுக்கு வந்து ஒருகோடி 15லட்சம் பணம் கொடுத்ததாகவும், இது கணக்கில் வராத பணம். இது பற்றியாரிடமும் சொல்லக்கூடாது. சொன்னால் தளபதி (ஸ்டாலின்), மத்திய தி.மு.க. அமைச்சர் பழனிமாணிக்கத்திடம் சொல்லி இன்கம்டாக்ஸ் மூலம் தொந்தரவு செய்வார் என்று சீனிவாசன் கூறிவிட்டு, கொடுத்த பணத்தில் ரூ.15 லட்சத்தை கமிஷன் என்ற பெயரில் எடுத்துக் கொண்டுவிட்டார். அந்த வீட்டை உதயநிதி பெயரில் ரூ.20 ஆயிரம் வாடகைக்கு ஒப்பந்தம் போட்டு ஸ்டாலின் மகள் செந்தாமரை குடியிருந்து வருகிறார் என்று புகாரில் கூறியிருந்தார்.

இது பற்றி போலீஸ் கமிஷனர் திரிபாதி உத்தரவின்பேரில் மத்திய குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனர் அபயகுமார் சிங் மேற்பார்வையில் உதவி கமிஷனர் ஜேசுராஜன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

இந்த புகார் கொடுக்கபட்டது தெரியவந்ததும் மு.க.ஸ்டாலின், டி.ஜி.பி. அலுவலகத்துக்கு வக்கீலுடன் சென்று மனு கொடுத்தார். அதன்பிறகு இந்த வழக்கு தொடர்பாக மு.க.ஸ்டாலின் மகன் உதயநிதி, ஜகோர்ட்டு முன்ஜாமீன் மனு தாக்கல் செய்தார். அதன் பேரில் அவருக்கு முன்ஜாமீன் வழங்கப்பட்டது. சைதாப்பேட்டை 11-வது கோர்ட்டில் ஆஜராகி ஜாமீன் தொகை செலுத்த வேண்டும் என்று  ஜகோர்ட் உத்தரவிட்டது. டிசம்பர் 22-ந் தேதியுடன் ஜகோர்ட் வழங்கிய முன்ஜாமீன் உத்தரவு முடியும் தருவாயில் முன்னதாக ஜகோர்ட்டில் ஆஜராகி முன்ஜாமீன் பெற்றுக் கொண்டார்.

இதை தொடர்ந்து கடந்த மாதம் உதயநிதி ஸ்டாலின் சைதாப்பேட்டை கோர்ட்டில் ஆஜராகி ஜாமீன் தொகை செலுத்தினார்.  அந்த கோர்ட்டின் உத்தரவுப்படி சென்னை கமிஷனர் அலுவலகத்தில் உள்ள மத்திய குற்ற பிரிவு அலுவலகத்தில் நில அபகரிப்பு விசாரணை அதிகாரி முன்பு ஒருமாதத்துக்கு காலையில் 10 மணிக்கு ஆஜராக வேண்டும் என்றும், அதன் பிறகு போலீசார் கூப்பிடும் நேரம் விசாரணைக்கு வர வேண்டும் என்று மாஜிஸ்திரேட் ராம் ஜாமீன் வழங்கினார். அந்த முன்ஜாமீன் உத்தரவுப்படி உதயநிதி ஸ்டாலின் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் உள்ள, மத்திய குற்றப்பிரிவு நிலஅபகரிப்பு வழக்கு உதவி கமிஷனர் ஜேசுராஜன் அலுவலகத்துக்கு நேற்று காலை 9.50 மணிக்கு உதயநிதி,  6 வக்கீல்களுடன் வந்தார். ஆஜராகி இன்ஸ்பெக்டர் காதர் பாஷா முன்னிலையில் கையெழுத்திட்டார். அதன்பிறகு அவரிடம் இன்ஸ்பெக்டர் காதாபாட்சா, 10 கேள்விகள் கேட்டார்.

அந்த வீட்டை வாங்கியதாக கூறப்படும் வேணுகோபால்ரெட்டியை உங்களுக்கு எப்படி தெரியும் என்று கேட்டார். உதயநிதிக்கு பதிலாக அவருடன் வந்த வக்கீல்கள் பதில் அளித்தனர்.

அந்த வீட்டில் வாடகைக்கும் இருக்கிறீர்களா என்று இன்ஸ்பெக்டர் கேட்டார். ஆம். எனது தங்கை செந்தமாரை வாடகைக்கு இருக்கிறார் என்று கூறினார்.

இதுபோல் 10 கேள்விகளுக்கு பதில் சொன்னபிறகு விசாரணைக்காக நாளை காலை 10 மணிக்கு வர வேண்டும் என்று இன்ஸ்பெக்டர்  காதர்பாசா கூறினார். அதன்பிறகு உதயநிதி கமிஷனர் ஆபீசுக்கு வெளியே நிறுத்திவைக்கப்பட்டிருந்தகாரில் ஏறி வீட்டுக்குச் சென்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago