முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முன்னாள் அமைச்சரின் மனைவிக்கு முன் ஜாமீன் மறுப்பு

சனிக்கிழமை, 7 ஜனவரி 2012      தமிழகம்
Image Unavailable

சென்னை, ஜன.- 7 - சொத்து அபகரிப்பு வழக்கில் முன்னாள் ரயில்வே இணை அமைச்சரின் மனைவிக்கு முன்ஜாமீன் வழங்க மறுத்து விட்டது. சென்னை மாவட்ட முதன்மை செசன்சு கோர்ட். சென்னை தி.நகரில் உள்ள சரவணா முதலி தெருவில் மகாலிங்கம் என்பவருக்கு சொந்தமான சுமார் 1240 சதுர அடி நிலம் மற்றும் கட்டிடம் இருந்தது. அதை ரூ.14 லட்சத்திற்கு 1988-ல் செல்வ சரோஜாவிற்கு விற்கப்பட்டது. இந்த இடத்தை செல்வ சரோஜா தன்னுடைய பேத்தி விஷ்ணு தர்ஷணா பெயருக்கு கடந்த 30.11.1994-ந் தேதி உயில் எழுதி வைத்தார். விஷ்ணு தர்ஷணா தாயார் பெயர் சசிந்தனா சென்னை நில அபகரிப்பு வழக்குகளை விசாரிக்கும் தனிப்பிரிவு போலீசுக்கு சசிந்தனா 13.10.2011-ந் தேதி  புகார் செய்தார்.
அந்த புகாரில் கூறியிருப்பதாவது:- எங்களுக்கு சொந்தமான சொத்தை 2002-ம் ஆண்டு ஏப்ரல் 10-ந் தேதி (என் அம்மாவுக்கு விற்பனை செய்த) மகாலிங்கத்திடம் தன் பெயருக்கு அதிகார பத்திரம் எழுதியுள்ளதாக ராஜேஸ் என்பவர் போலியாக பத்திரம் தயாரித்த்துள்ளார். பின்னர் 4.7.2002ல் இந்த சொத்தை 20 ஆண்டு குத்தகைக்கு முன்னாள் மத்திய இரயில்வே இணை அமைச்சர் ஏ.கே.மூர்த்தியின் மனைவி பத்மினி என்பவருக்கு ராஜேஸ் எழுதி கொடுத்துள்ளார். அதில் குத்தகைக்கான முன் பணம் ரூ.5 லட்சமும், அதற்கு மாத வாடகை ரூ.100 என்று ஒப்பந்தம் செய்துள்ளார். இதன் பின்னர் 2006-ம் ஆண்டு எங்கள் சொத்தை வள்ளுவன் என்பவருக்கு ரூ.12 லட்சத்திற்கு ராஜேஷ் விற்பனை செய்துள்ளார். ஆகையால் மேற்படி எங்களது சொத்தை அபகரித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் தெரிவித்தார்.
இது குறித்து நில அபகரிப்பு வழக்கை விசாரிக்கும் தனிப்படை போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இதையடுத்து பத்மினி, ராஜேஷ் வள்ளுவன் ஆகியோர் முன் ஜாமீன் கேட்டு சென்னை மாவட்ட முதன்மை செசன்சு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர். அந்த மனு மீதான வழக்கில்  நீதிபதி கலையரசன் தனது உத்தரவில் கூறியிருப்பதாவது:-
இந்த சொத்தை செல்வ சரோஜாவுக்கு 1988-ம் ஆண்டு விற்பனை செய்த போது மகாலிங்கத்திற்கு 70 வயது. ஆனால் குற்றம் சுமத்தப்பட்டவர்கள் தாக்கல் செய்த அதிகார பத்திரத்தில் 2002-ம் ஆண்டு மகாலிங்கத்திற்கு 74 வயது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
சென்னையின் மத்தியில் உள்ள இடத்தை 1988-ம் ஆண்டு சர்ச்சைக்குரிய சொத்து ரூ.14 லட்சத்திற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. ஆனால் 2006-ம் ஆண்டு அதே சொத்து ரூ.12 லட்சத்திற்கு விற்பனை செய்யப்பட்டது. முன்பு விற்பனை செய்யப்பட்ட விலையை விட குறைவாக விற்பனை செய்யப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டவர்களின் விற்பனை பத்திரத்தில் குறிப்பிட்டுள்ளது. ஆனால் சொத்தின் சந்தை மதிப்பு ரூ.6 கோடி. இவற்றை வைத்து பார்க்கும்போது குற்றம் சுமத்தப்பட்ட ராஜேஸ், பத்மினி, வள்ளுவன் ஆகியோர் மீதான குற்றச்சாட்டுகளுக்கு ஆரம்ப முகாந்திரம் உள்ளது என கருதப்படுகிறது.
மேலும் அந்த சொத்தின் உண்மையான உரிமையாளர்கள், சொத்தை அனுப்பவிக்க விடாமல் குற்றம் சுமத்தப்பட்டவர்கள் செயல்பட்டுள்ளனர். எனவே பத்மினி, ராஜேஸ், வள்ளுவன் ஆகியோருக்கு முன்ஜாமீன் வழங்க முடியாது என நீதிபதி உத்தரவிட்டார்.
இந்த வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட பத்மினி என்பவர் முன்னாள் ரயில்வே துறை இணை அமைச்சரும், பா.ம.க. நிர்வாகியுமான ஏ.கே.மூர்த்தியின் மனைவி என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்