முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மேலூர் நகராட்சியில் ரூ. 1.13 கோடி செலவில் திட்டப்பணிகள்

சனிக்கிழமை, 7 ஜனவரி 2012      தமிழகம்
Image Unavailable

 

மேலூர், ஜன. - 7 - மதுரை மாவட்டம் மேலூர் நகராட்சியின் 2 வது கூட்டம் நடைபெற்றது.  நகராட்சி சேர்மன் சரவணன் தலைமை வகித்தார். துணை தலைவர் மெகராஜ்பீவி, கமிஷனர் பாஸ்கர சேதுபதி உள்ளிட்ட உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் 52 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.  நகர எல்லை பகுதியில் 40 மைக்ரானுக்கு குறைவான பிளாஸ்டிக் பை மற்றும் பொருட்களை விற்பனை செய்யவும், உபயோகப்படுத்தவும் முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது. பிளாஸ்டிக் கழிவு பொருட்களை பயன்படுத்தி சாலை அமைக்கும் பணிக்கு ரூ. 15 லட்சத்து 60 ஆயிரம் ஒதுக்கப்பட்டுள்ளது. நகர்ப்புற சுய வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் ரூ. 15 லட்சத்து 56 ஆயிரம் கடனுதவி, புதிய நூலகம் கட்ட தடையில்லா சான்று வழங்குதல், பொது சுகாதார பிரிவு திட கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் திருமண மண்டபங்கள், டிபன் சென்டர்கள் உள்ளிட்டவைகளுக்கு சேவை வரி விதிக்கப்படும் என்றும் வார சந்தை, பஸ் நிலையம், தினசரி மார்க்கெட், ஆடுவதை நுழைவு கட்டணம் ஆகியவற்றுக்கு ஏலம் விடுவது குறித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இக்கூட்டத்தின் போது அ.தி.மு.க. கவுன்சிலர் அன்புக்கரசு பேசியதாவது, சாலைகளில் குவியும் மணல்களால் விபத்து ஏற்படுகிறது. நகரில் குரங்கு, நாய், பன்றி போன்றவற்றால் பொதுமக்களுக்கு தொல்லை நேரிடுகிறது. ஆட்டோ ஸ்டாண்டை ஒழுங்குபடுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினார். இதற்கு பதிலளித்த தலைவர், சாலையில் கிடக்கும் மணலை அகற்ற எந்திரம் வாங்கவுள்ளது என்று கூறினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்