முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அகில உலக லயன்ஸ் சங்கங்கள் சார்பில் மதுரையில் சாலைப்பாதுகாப்பு வார விழா

சனிக்கிழமை, 7 ஜனவரி 2012      தமிழகம்
Image Unavailable

மதுரை,ஜன.- 7 - அகில உலக லயன்ஸ் சங்கங்கள், மதுரை மாவட்ட வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் மற்றும் மதுரை மாநகர் போக்குவரத்து காவல்துறை சார்பில் சாலைப்பாதுகாப்பு வார விழா நடைபெற்றது. ாலைப்பாதுகாப்பின் அவசியத்தை வலியுறுத்தி ஒவ்வொரு ஆண்டும் சாலைப்பாதுகாப்பு வாரம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக மதுரை சிட்டம்பட்டி நான்குவழிச்சாலை சுங்கவரிசோதனை சாவடி மற்றும் கொடைரோடு நான்குவழிச்சாலை சுங்கவரிசோதனை சாவடி உள்ளிட்ட இடங்களில் அகில உலக லயன்ஸ் சங்கங்கள், மதுரை மாவட்ட வட்டாரபோக்குவரத்து அலுவலகங்கள் மற்றும் மதுரை மாநகர் போக்குவரத்து காவல்துறை சார்பில் சாலைப்பாதுகாப்பு வாரவிழா நடைபெற்றது.  லயன்ஸ் சங்க முதல் துணை ஆளுனர் லயன். முருகேசன், இரண்டாம் துணை ஆளுனர் கள்ளந்திரி. எம்.முத்துராமலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அகில உலக லயன்ஸ் சங்க மாவட்ட ஆளுனர் லயன். நந்தகுமார் தலைமை வகித்து சாலைப்பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்தும், பாதுகாப்பான சாலைப்பயணத்தின் அவசியம் குறித்தும் விளக்கம் அளித்தார். இதன் பின்னர், வட்டார போக்குவரத்து அலுவலர்கள் நடராஜன், ரவிச்சந்திரன், செல்வகுமார், மகுடபதி, பாலகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலையில், மில்லினியம் லயன்ஸ் சங்க பட்டயத்தலைவரும், மை மதுரை பள்ளி இயக்குனமான லயன். கீதா கண்ணன், பொருளாளர் லயன். கண்ணன் மற்றும் மில்லினியன் லயன்ஸ் சங்க உறுப்பினர்கள் சாலைப்பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்துக்கள் அடங்கிய நோட்டீஸ்களை வாகன ஓட்டுனர்களுக்கும், பயணிகளுக்கும் விநியோகம் செய்தனர்.  சாலைப்பாதுகாப்பு விழாவிற்கான ஏற்பாடுகளை மேலூர் சுப்ரீம் லயன்ஸ் சங்கம், மதுரை திருப்பரங்குன்றம் பேஷன் லயன்ஸ் சங்கம், மதுரை ஆனந்தம் லயன்ஸ் சங்கம், திண்டுகல் பிரைட் விஷன் லயன்ஸ் சங்கம், நகரி அமுதசுரபி லயன்ஸ் சங்கம், மதுரை மில்லினியம் லயன்ஸ் சங்கத்தினர் செய்திருந்தனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்