முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இன்டியன் ஆயில் டிப்போவை கண்டித்து பெட்ரோல் பங் கொள்முதல் நிறுத்தம்

சனிக்கிழமை, 7 ஜனவரி 2012      தமிழகம்
Image Unavailable

சங்ககிரி,ஜன.- 7 - சங்ககிரியில் உள்ள இன்டியன் ஆயில் டிப்போவை கண்டித்து பெட்ரோல் பங் உரிமையாளர்கள் கொள்முதல் நிறுத்தம் செய்துள்ளனர்.  சங்ககிரி நாரணப்பன்சாவடியில் இண்டியன் ஆயில் கார்ப்பரேசனின் கிடங்கு உள்ளது.  இங்கிருந்து சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், ஈரோடு ஆகிய சுற்று பகுதி மாவட்டங்களுக்கு டீசல், பெட்ரோல் மற்றுக் மண்ணெண்ணை விநியோகக் செய்யப் படுகிறது.  இதில் டீசல் மற்றுக் பெட்ரோல் விற்பனை செய்ய 283 பெட்ரோல் பங்குகள் இங்கிருந்து டீசல் மற்றும் பெட்ரோலை கொள்முதல் செய்து சில்லறை விநியோகம் செய்து வருகின்றன.  கொள்முதல் செய்ததற்கான தொகையினை தினசரி நிர்வாகத்திற்கு பங் உரிமையாளர்கள் செலுத்தி வந்தனர்.கடந்த வாரத்தில் இன்டியன் ஆயில்  கார்ப்பரேசனில் இருந்து 2010 ஆம் ஆண்டில் கொள்முதல் செய்ததற்கு காலம் தாழ்த்தி தொகை செலுத்தியதாக 85 பங் உரிமையாளர்களுக்கு அபராதத் தொகை செலுத்துமாறு தகவல் கொடுகப்பட்டது.  இதில் ஒரு நாள் காலக் தாழ்த்தியதற்கு ரூ.1000, மறுமுறை காலம் தாழ்த்தியதற்கு ரூ.2000, மூன்றாம் முறையும் காலம் தாழ்த்தியிருந்தால் ரூ.5000 என அபராதம் குறிப்பிடப்பட்டிருந்தது.  இந்த வகையில் 85 பங் உரிமையாளர்களும் சுமார் ரூ.85 இலட்சங்கள் செலுத்த வேண்டிய கட்டாயம்  ஏற்பட்டது. இதனை கண்டித்து நேற்று காலை 8.30 மணி முதல் சங்ககிரியிலிருந்து கொள்முதல் செய்யும் அனைத்து பெட்ரோல் பங் உரிமையாளர்களும் கொள்முதல் நிறுத்தக் செய்தனர்.  இதனால் டீசல் மற்றும் பெட்ரோல் ஏற்றிச் செல்லும் டேங்கர் லாரிகள் டிப்போ வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்தன.  மாலை 4 மணியளவில் பங் உரிமையாளர்களுடன் இன்டியன் ஆயில் கார்ப்பரேசன் மண்டல மேலாளர் சுரேஷ்குமார், சங்ககிரி டிப்போ பொறுப்பாளர் குமார் ஆகியயோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.   பேச்சுவார்த்தைகு பின் ஏற்பட்ட சுமுகமான முடிவால் டேங்கர் லாரிகளில் டீசல் பெட்ரோல் நிரப்பும் பணி நடைபெற்றது.

படக்  சங்ககிரியில் உள்ள இன்டியன் ஆயில் டிப்போவில் பெட்ரோல் பங் உரிமையாளர்கள் கொள்முதல் நிறுத்தம் செய்ததால் டேங்கர் லாரிகள் வளாகத்தில் காத்து நின்றன.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்