முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னையில் 2 நாள் அகில இந்திய பெண் வழக்கறிஞர்கள் தேசிய மாநாடு

ஞாயிற்றுக்கிழமை, 8 ஜனவரி 2012      தமிழகம்
Image Unavailable

சென்னை, ஜன.- 8 - தமிழ்நாடு பெண் வழக்கறிஞர்கள் கூட்டமைப்பு பொறுப்பேற்று நடத்தும் அகில இந்திய பெண் வழக்கறிஞர்கள்  கூட்டமைப்பின் 2 நாள் தேசிய மாநாடு சென்னை எம்.ஆர்.சி. நகரில் உள்ள இமேஜ் ஆடிட்டோரியத்தில் நேற்று காலை துவக்கியது. சுப்ரீம் கோர்ட் நீதிபதி சதாசிவம் மாநாட்டை துவக்கி வைத்தார். பெண் நீதிபதி  ரஞ்சனா தேசாய், தலலைமை நீதிபதி டி.முருகேசன், தமிழக அமைச்சர் சி.வி.சண்முகம், மத்திய அமைச்சர் ஜெயந்தி நடாரஜன், தமிழ்நாடு பெண் வழக்கறிஞர்கள் கூட்டமைப்பு தலைவர் சாந்தகுமாரி உள்பட பலர் கலந்து கொண்டு உரையாற்றினார்கள். விழாவில் மாநாட்டு மலரை சென்னை ஜகோர்ட் நீதிபதி டி.முருகேசன் வெளியிட, சீனியர் அட்வகேட் நளினி சிதம்பரம் பெற்றுக் கொண்டார். மாநாட்டில் தமிழக பள்ளிக் கல்வித்துறை, சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், மத்திய  அமைச்சர் ஜெயந்தி நடாரஜன், அரசு தலைமை வழக்கறிஞர் நவநீத கிருஷ்ணன், சுப்ரீம் கோர்ட் பார் அசோசியேஷன் தலைவர் பரேக் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். அகில இந்திய பெண் வழக்கறிஞர்கள் சங்க செயலாளர் இந்திராணி நன்றி உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:- சுப்ரீம் கோர்ட் நீதிபதி சதாசிவம் மாநாட்டை நடத்த சென்னையைத் தேர்ந்தெடுத்தற்கு முதலில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். பெண்களின் முன்னேற்றத்திற்காக சட்டங்கள் பல இயற்றப்பட்டுள்ளன. மனித உரிமைகளை காப்பதில் பெண்களின் பங்கு மிகமுக்கியமானது. பெண்களுக்குகான வாய்ப்புகள் பெற்று கொடுக்க புதிய சட்டங்களுக்கு, சட்டத்திருத்தங்களும் கொண்டு வரப்பட்டுள்ளன. பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீட்டினை பெற்றத் தருவவதற்கு போராடும் வேளையில் உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 50 சதவீத உரிமையை வழங்கியது உச்சநீதிமன்றத்தில் அரசியல் சாசன பெஞ்சாகும் என்று பேசினார். சுப்ரீம் கோர்ட் பெண் நீதிபதி ரஞ்சனா பி.தேசாய் பேசுகையில், பெண் வக்கீல்கள் அதிக நாட்கள் ஜுனியலர் வக்கீலாக பணியாற்ற வேண்டாம். ஒரு காலக்கட்டத்திற்கும் பின் தன்னிச்சையாக செயல்பட வேண்டும். அது உங்களை நல்ல நிலைக்கு கொண்டு செல்லும் என்று கூறினார்.
நீதிபதி ரஞ்சனா பி.தேசாயிக்கு, தமிழ்நாடு பெண் வழக்கறிஞர்களின் கூட்டமைப்பு தலைவர் சாந்தகுமாரி நினைவுப் பரிசு வழங்கினார்.
சுப்ரீம் கோர்ட் பார் அசோசியேஷன் தலைவர் பரேக் பேசுகையில், நீதித்துறையில் 50 சதவீதம் பெண்களை நியமனம் செய்ய வேண்டும். மேலும் நீதிமன்றத்தில் பெண் வக்கீல்களுக்கு தனி அறைகள் அமைக்கப்பட வேண்டும் என்று கூறினார்.
தமிழக அரசு தலைமை வழக்கறிஞர் நவநீத கிருஷ்ணன் பேசுகையில், நான் இந்த அளவுக்கு முன்னேறியதற்குகாரணம் முதலமைச்சர் ஜெயலலிதா தான். எனக்கு அவர் கொடுத்த பதவி தான் இந்த மாநாட்டில் உங்கள் முன் என்னை பேச வைத்துள்ளது. முதலில் நான் அவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்ளிறேன். பெண் வக்கீல்களுக்கும்,நீதிதுறைக்கும் சிறந்த சேவை செய்ய கடமை பட்டுள்ளேன் என்று கூறினார்.
தமிழக அமைச்சர் சி.வி.சண்முகம் பேசும்போது, பெண் வக்கீல்கல் மீது முதலமைச்சர் ஜெயலலிதா மிகுந்த கவனம் செலுத்தி வருகிறார். வக்கீல் தொழில் ஒரு சிறந்த தொழிலாகும். பெண்களின் சரித்திரத்தையும், புகழையும் கூற தமிழ் சரித்திர நூல்கள் ஏராளம் உள்ளன. தமிழக முதலமைச்சர் நீதித்துறைக்கு ரூ.5 கோடி மதிப்பில் கட்டிடம் கட்ட உத்தர விட்டுள்ளார்.
மேலும் மதுரைகிளை விரிவாக்கத்திற்கு அதிகி அளவு நிதி உதவி செய்துள்ளார் என்றார்.
இந்தியாவில் முதன்முதலாக, ஸ்ரீரங்கத்தில் தேசிய சட்டப்பள்ளி நிறுவுவதற்கான வழிவகையை முதலமைச்சர் ஜெயலலிதா செய்து வருகிறார். இந்த மாநாடு நடத்த ரூ.20 லட்சம் நிதியும் வழங்கியுள்ளார். நீதித்துறைக்கும் முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான இந்த அரசு எப்போதும் உதவி செய்யும் என்று அமைச்சர் சி.வி.சண்முகம் பேசினார்.
தமிழ்நாடு பெண் வழக்கறிஞர்கள் சங்க கூட்டமைப்பு தொடர்பாளர் சுஜாதா ரெங்கராஜன் மற்றும்  சென்னை உள்பட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த பெண் வழக்கறிஞர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
மாநாட்டின் தொடர்ச்சியாக பிற்பகல்  2.30 மணிக்கு வாடகை தாய் என்ற நிகழ்வு சட்டத்திற்கு சவால் என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து மாலை 4.30 மணிக்கு கவுரவக் கொலை என்ற தலைப்பில் கலப்பு திருமணம், வரதட்சணை பிரச்சனை தொடர்பான கருத்தரங்கமும் நடைபெற்றது.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்