முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தேர்தலுக்கு பிறகு கூட்டணி ஆட்சி - தங்கபாலு

புதன்கிழமை, 16 மார்ச் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை. மார்ச்.16 - பாராளுமன்றத்தில் 10 தொகுதியில் போட்டியிட்டோம், அதை 16 தொகுதிகளாக மாற்றினோம். சட்டமன்றத்தில் 48 தொகுதிகளில் போட்டியிட்டோம், அதை 63 தொகுதிகளாக மாற்றியுள்ளோம். தொடர்ந்து தமிழகத்தில் காங்கிரஸை முன்னிலைப்படுத்தும் முயற்சி தொடரும், தேர்தலுககு பிறகு சோனியா-கருணாநிதி பேசி கூட்டணி ஆட்சி அமைப்போம். தொண்டர்களுக்கு விரைவில் நல்ல சேதி வரும் என்று தங்கபாலு சென்னையில் கூறினார்.

63 தொகுதிகளுக்கும் நாளை முதல் விருப்ப மனு பெறப்படும் என்று தங்கபாலு கூறினார். தமிழக காங்கிரஸ் தலைவர் கே.வி.தங்கபாலு நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழ்நாட்டில் காங்கிரஸ் போட்டியிடும் 63 தொகுதிகளுக்கும நாளை (புதன்கிழமை) காலை முதல் போட்டியிட விரும்புகிற வர்கள் விருப்ப மனு செய்யலாம். நாளை மறுநாள் வரை இரண்டு நாட்கள் விருப்ப மனுக்கள் பெறப்படும். போட்டியிட விரும்புபவர்கள் சத்தியமூர்த்தி பவனில் விண்ணப்பங்களை பெற்று, nullர்த்தி செய்து கொடுக்க வேண்டும். பொது தொகுதிக்கு ரூ.5000, தனித் தொகுதிக்கு ரூ.2500, பெண்களுக்கு ரு.2500 விண்ணப்ப கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விருப்ப மனுக்கள் அனைத்தும் பரிசீலனை செய்யப்பட்டு கட்சி தலைமைக்கு அனுப்பப்படும். 

பின்னர் சோனியா தலைமையிலான தேர்தல் குழு வேட்பாளர் பட்டியலை உறுதி செய்து அறிவிக்கும். காங்கிரஸ் தொகுதி பங்கீடு தொடர்பாக ஐவர் குழு தமிழ்நாட்டில் காங்கிரஸ் போட்டியிட்டு வென்ற பெரும்பான்மை தொகுதிகளை பெற்று தந்துள்ளது. மேலும் எல்லா மாவட்டங்களிலும் பெரும் பான்மையான பாராளுமன்ற தொகுதிகளிலும் காங்கிரஸ் போட்டியிடும் வகையில் தொகுதிகளை பெற்று உறுதி செய்துள்ளோம். 

தர்மபுரி, தேனி ஆகிய 2 மாவட்டங்களில் மட்டும் காங்கிரஸ் போட்டியிடும் வாய்ப்பு கிடைக்கவில்லை. அதற்காக எவ்வளவோ முயற்சி எடுத்தும் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்க வேண்டியிருந்ததால் காங்கிரஸ் போட்டியிட முடியவில்லை. அடுத்துவரும் உள்ளாட்சி மற்றும் மேல்சபை தேர்தலில் அந்த இரு மாவட்டங்களைச் சேர்ந்த காங்கிரசாருக்கு முன்னுரிமை வழங்கப்படும். சோனியா ஒப்புதலோடு வெளியிடப்பட்ட பின்பு இந்த 63 தொகுதிகளிலும் மற்றும் கூட்டணி கட்சியினர் போட்டியிடும் தொகுதியிலும் காங்கிரஸ் வெற்றிக்கும், கூட்டணி கட்சிகளின் வெற்றிக்கும் உரிமையோடும் பொறுப்போடும் அனைவரும் பாடுபட வேண்டும். 

சோனியாகாந்தி வகுத்த நெறிமுறை அடிப்படையில் காங்கிரஸ் தொகுதிகள் பெறப்பட்டுள்ளன. அரசியல் ரீதியாக பல்வேறு கட்டங்களை தாண்டி இன்று உடன்பாட்டை நிறைவு செய்துள்ளோம். கடந்த தேர்தலில் 48 தொகுதிகளில் போட்டியிட்டோம். இந்த தேர்தலில் 63 தொகுதிகளில் போட்டியிடுகிறோம். 2004 பாராளுமன்ற தேர்தலில் 10 தொகுதியில் போட்டியிட்டோம். கடந்த 2009 பாராளுமன்ற தேர்தலில் 16 தொகுதிகளை பெற்று போட்டியிட்டோம். 

தொடர்ந்து தமிழகத்தில் காங்கிரசை முன்னிலைப்படுத்தும் முயற்சிகளை எடுத்து வருகிறோம். மத்திய அரசின் சாதனைகளும் மாநில அரசு நிறை வேற்றிய மக்கள் நலத் திட்டங்களும் காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சிகளின் வெற்றிக்கு கைகொடுக்கும். அடுத்து வரும் ஐந்து ஆண்டுகளிலும் நல்லாட்சி தொடர இந்த கூட்டணியை மக்கள் வெற்றிபெறச் செய்வார்கள். காங்கிரஸ் ​ திமுக கூட்டணி வெற்றி கூட்டணி. 

இவ்வாறு அவர் கூறினார். 

கேள்வி:​ காங்கிரஸ் ​ திமுக கூட்டணி வெற்றி பெறும் பட்சத்தில் ஆட்சியில் பங்கு கேட்பீர்களா? 

பதில்:​ தேர்தல் முடிவுக்குப் பிறகு சோனியாவும் முதல் அமைச்சர் கருணாநிதியும் சேர்ந்து நல்ல செய்தியை வழங்குவார்கள். காங்கிரஸ் தொண்டர்களுக்கு வசந்த காலம், நல்ல செய்தி வரும். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago