முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தை புறக்கணிக்கும் மத்தியரசுக்கு சரத்குமார் கண்டனம்

செவ்வாய்க்கிழமை, 10 ஜனவரி 2012      சினிமா
Image Unavailable

 

தென்காசி. ஜன.10 - தமிழகத்தை அனைத்து வகைகளும் மத்திய அரசு புறக்கணிப்பதோடு, மாற்றாந்தாய் மனப்பாண்மையோடு செயல்பட்டுவரும் மத்திய அரசை கண்டித்து வரும் 28 ம் தேதி திருச்சியில் சமத்துவ மக்கள் கட்சி சார்பில் கண்டன பொதுக்கூட்டம் நடத்தப்படும் என்றும் குற்றாலத்தில் சரத்குமார் எம்.எல்.ஏ. தெரிவித்துள்ளார். தமிழகத்தை மத்திய அரசு பல்வேறு வகைகளும் புறக்கணிப்பதோடு, தொடர்ந்து மத்திய அரசு மாற்றாந்தாய் மனப்பாண்மையுடன் செயல்பட்டு வருகிறது. குறிப்பாக முல்லைப் பெரியாறு பிரச்சினையில் தமிழகத்திற்கு சாதகமாக உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்த பிறகும் கூட அதனை செயல்படுத்த மத்திய அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வில்லை. இலங்கை தமிழர் பிரச்சினையிலும், தமிழக மீனவர்கள் மீது தொடர்ந்து இலங்கை ராணுவத்தினர் தாக்குதலை தடுத்து நிறுத்தாமல், அவர்களுக்கு ஆதரவாக பேசிவருகிறார்கள் தமிழகத்தை தாக்கிய தானே புயலால் ஏற்பட்டுள்ள பாதிப்பை ஈடுகட்ட மத்திய அரசு உடனடியாக நிதி உதவி செய்யாமல் இழுத்தடித்து வருகிறார்கள். இப்படி தொடர்ந்து மத்திய அரசு தமிழகத்திற்கு எதிராக மாற்றாந்தாய் மனப்பாண்மையுடன் செயல்பட்டு வருவதை கண்டிக்கும் வகையில் சமத்துவ மக்கள் கட்சி சார்பில் வரும் 28 ம் தேதி கண்டன பொதுக்கூட்டம் நடைபெறும் இந்த கூட்டத்தில் நானும், தலைமைக் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டு மத்திய அரசை கண்டித்து பேசுவோம். சமத்துவ மக்கள் கட்சி துவங்கப்பட்டு 5 ஆண்டுகள் ஆகிறது. அதனை தொடர்ந்து அனைத்து மாவட்டங்களுக்குமா நான் நேரில் சென்று தொண்டர்களை சந்தித்து கட்சியின் செயல்பாடுகள் குறித்து பேச இருக்கிறேன். மேலும் ஏற்கெனவே கோயமுத்தூர், திருப்பூர், சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் நடத்திய மக்கள் தரிசனம் நிகழ்ச்சி தொடர்ந்து மீதமுள்ள அனைத்து மாவட்டங்களிலும் மக்கள் தரிசனம் நிகழ்ச்சி நடத்தப்படும்.    

தென்காசியில் சர்வீஸ் ரோடு அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. தென்காசி கோவிலை சுற்றியுள்ள 4 ரதவீதிகளிலும் சிமெண்ட் தளம் அமைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது. தென்காசி தொகுதியில் மக்கள் பிரச்சினைகளுக்கு உடனடியாக தீர்க்க அனைத்து நடவடிக்கைகளும் எடுத்து வருகிறேன். தென்காசி தொகுதி மக்களின் அடிப்படை தேவைகள், உடனடியாக நிறைவேற்ற வேண்டிய பிரச்சினைகள், மற்றும் மக்களின் கோரிக்கைகள் ஆகியவற்றை ஆய்வு செய்துள்ளேன். இந்த பிரச்சினைகள் அனைத்திற்கும் தீர்வு காண தீவரமாக செயல்பட்டு வருகிறேன்.குறிப்பாக பொது மக்களுக்கு தேவையான குடிநீர்,  சுகாதாரம், தெருவிளக்கு, மருத்துவம், கல்வி, ஆகியப் பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து செயல்பட்டு வருகிறேன். மேலும் தென்காசி தொகுதியில் ஒரு தொழிற்சாலை அமைக்க மிகவும் முனைப்புடன் செயல்பட்டு வருகிறேன். குற்றாலத்தை சிறந்த சுற்றுலா தளமாக மாற்றவும், குற்றாலம் வரும் உல்லாச பயணிகளுக்கு சிறந்த பொழுது போக்கு அம்சங்களை உருவாக்கவும் உரிய நடவடிக்கை மேற்கொண்டு வருகிறேன். 

தென்காசி போக்குவரத்து நெரிசலை தவிர்க்க ரிங்ரோடு அமைக்க ஆய்வுப்பணியை மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட கலெக்டரிடம் தெரிவித்துள்ளேன். தென்காசியில் விரைவில் ஒவுங்கிணைந்த நீதிமன்றம் வளாகம் கட்டிடம் கட்டவும், தென்காசி குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்திற்கு உடனடியாக நீதிபதி நியமனம் செய்யவும், குற்றாலம் அருகே உள்ள காசிமேஜர்புரம் பொது மக்களின் கோரிக்கையை நிறைவேற்ற அவர்களுக்கு தனியாக பைப் லைன் அமைத்து தரப்படும். இவ்வாறு சரத்குமார் எம்.எல்.ஏ. தெரிவித்தார். அப்போது அவருடன் நெல்லை மாவட்ட சமத்து மக்கள் கட்சியின் செயலாளர் தங்கராஜ், மாவட்ட இளைஞரணி செயலாளர் துரை, நந்து, சண்முகம், கருப்பையா ஆகியோர் உடன் இருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்