முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழக நதிகளை இணைக்க அப்துல் கலாம் யோசனை

செவ்வாய்க்கிழமை, 10 ஜனவரி 2012      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஜன.10 - தமிழ்நாடு முழுவதும் பாயும் வற்றாத ஜீவநதிகளை தமிழக அரசு இணைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலாம் யோசனை தெரிவித்துள்ளார். முல்லைப்பெரியாறு அணை குறித்து இருமாநில முதல்வர்களும் பேசி தீர்வு காணவேண்டும் என்று தெரிவித்துள்ளார். சென்னையில் நடைபெற்றுவரும் புத்தக கண்காட்சியில் கலந்துகொண்டு அப்துல்கலாம் பேசியதாவது:- தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக பேராசிரியர் வடிவேலன் எழுதிய உழுதவன் கணக்கு, செயற்கைக்கோளின் பார்வையில் தமிழக நதிகள் என்ற தலைப்பில் காந்திய கிராமப் பல்கலைக்கழக துணைவேந்தர் ராமசாமி எழுதிய நூல் ஆகியவற்றை கடந்த வாரம் படித்தேன். விவசாயிகளும், தொழிலாளர்களும் இதுபோன்ற புத்தகங்களை படிப்பது அவசியம். 

செயற்கை கோளின் பார்வையில் தமிழக நதிகள் என்ற நூலில் தமிழக நதிகளின் பிறப்பிடம், அது ஓடும் மலைப்பகுதி, சமவெளி பகுதி உள்ளிட்டவை குறித்தும், அதனால் பூமியில் ஏற்படும் மாற்றங்கள் குறித்தும் அந்த புத்தகத்தில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் பாயும் காவிரி, தாமிரபரணி, பாலாறு உள்ளிட்ட நதிகளை இணைத்து நீர்வழிச்சாலை அமைத்தால் 100 டி.எம்.சி. தண்ணீரை தேக்கிவைக்க முடியும். இதன்மூலம் தமிழகம் வளமான பூமியாக மாறும். எனவே நதிகளை இணைத்து வளமான தமிழகத்தை உருவாக்க அனைத்து தரப்பினரும் ஒன்றுசேர்ந்து பாடுபடவேண்டும். அதுகுறித்து அனைவரும் கனவு காணவேண்டும். அந்த கனவு நினைவாகும் வரை தூங்கக்கூடாது. தூக்கத்தில் வருவதில்லை கனவு, தூங்கிவிடாமல் காண்பதுதான் நல்ல கனவாகும். 

இவ்வாறு அப்துல் கலாம் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago