முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமராவதி பாசன ஆயக்கட்டுப்பகுதிக்கு தண்ணீர் திறப்பு

செவ்வாய்க்கிழமை, 10 ஜனவரி 2012      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஜன.10 - அமராவதி அணையிலிருந்து அமராவதி புதிய மற்றும் பழைய ஆயக்கட்டுப் பாசனப்பகுதிகளுக்கு இன்றுமுதல் தண்ணீர் திறந்துவிட முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.  இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- திருப்பூர் மாவட்டத்திலுள்ள அமராவதி அணையிலிருந்து, திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் உள்ள புதிய மற்றும் பழைய ஆயக்கட்டு பாசனப் பகுதிகளுக்கு தண்ணீர் திறந்து விடுமாறு வேளாண் பெருங்குடி மக்களிடமிருந்து எனக்கு கோரிக்கைகள் வந்துள்ளன. வேளாண் பெரு மக்களின் வேண்டுகோளினை ஏற்று, திருப்பூர் மாவட்டம், அமராவதி அணையிலிருந்து திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களிலுள்ள அமராவதி பாசன அமைப்பின்கீழ் உள்ள புதிய மற்றும் பழைய ஆயக்கட்டு பாசனப் பகுதிகளுக்கு 10.1.2012 முதல் தண்ணீர் திறந்து விடநான் உத்தரவிட்டுள்ளேன். 

இதனால், திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் உள்ள 54,637 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் நான் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா அறிக்கையில் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்