முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெல்லி பட்ஜெட் கூட்டத்தொடர் துவங்கியது

புதன்கிழமை, 16 மார்ச் 2011      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி, மார்ச்16 - பரபரப்பான அரசியல் புயலோடு டெல்லி மாநில பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று துவங்கியது. டெல்லி மாநில சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று காலை துவங்கியது.  அப்போது மரபுப்படி டெல்லி துணை நிலை ஆளுனர் தேஜேந்திர கன்னா உரை நிகழ்த்த துவங்கினார்.

அப்போது பா.ஜ.க. மூத்த தலைவர்களில் ஒருவரும் எதிர்க்கட்சித்தலைவருமான வி.கே.மல்ஹோத்ரா எழுந்து டெல்லி பொதுப்பணித்துறை அமைச்சர் ராஜ்குமார் சவுகான் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து பேசினார்.

வரி ஏய்ப்பில் சம்பந்தப்பட்ட ஒரு சுற்றுலா ஓட்டலை  இந்த அமைச்சர் காப்பாற்ற உதவியிருக்கிறார் என்றும் எனவே அவரை பதவி நீக்கம் செய்யலாம் என்றும் லோக் அயுக்தா நீதிமன்றம் ஒன்று சிபாரிசு செய்துள்ளது குறித்தும் மல்ஹோத்ரா சுட்டிக்காட்டினார். 

எனவே அந்த அமைச்சரை உடனடியாக பதவி நீக்கம்  செய்ய வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

இதனால் சபையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.

அந்த அமைச்சர் அரசியல்சட்டதிட்டங்களுக்கு எதிராக செயல்பட்டிருக்கிறார். எனவே அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று மல்ஹோத்ரா வலியுறுத்தினார்.

கவர்னர் உரை நிகழ்த்த துவங்கியதுமே பரபரப்பான அரசியல் புயலை எதிர்க்கட்சிகள் இவ்வாறு எழுப்பின.

மல்ஹோத்ரா ஒரு புறம் தனது  கோரிக்கையை முன்வைத்து பேசிக்கொண்டிருக்க அதைப்பற்றி கவலைப்படாமல் கவர்னர் தனது உரையை தொடர்ந்து வாசித்துக்கொண்டே இருந்தார்.

பல்வேறு கோரிக்கை அட்டைகளை கையில் ஏந்தியபடி அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பியபடி பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் சபையின் மையப்பகுதியை நோக்கி விரைந்தனர். இதனால் சபையில் பெரும் அமளி ஏற்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்