முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எம்.ஜி.ஆர். வழியில் கல்விக்கு முதல்வர் முக்கியத்தும்

செவ்வாய்க்கிழமை, 10 ஜனவரி 2012      அரசியல்
Image Unavailable

 

தென்காசி. ஜன.10 - தென்காசி அருகே உள்ள பாவூர்சத்திரம் குறும்பலாப்பேரி அரசு உயர்நிலைப்பள்ளியில் நடைபெற்ற மாணவர்களுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்து கொண்ட எம்.எல்.ஏ. சரத்குமார் தமிழகத்தில் கல்விப்பணி செய்த பெருந்தலைவர் காமராஜர், புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். வழியில் தொடர்ந்து கல்விக்கு பல்வேறு நலத்திட்டங்களை முதல்வர் ஜெயலலிதா செயல்படுத்தி வருவதாக பேசினார். குறும்பலாப்பேரி உயர்நிலைப்பள்ளியில் நடைபெற்ற இந்த விழாவிற்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் ஞானசுந்தரம் தலைமை தாங்கினார். மாவட்ட கவுன்சிலர் முருகேசன், சேர்மப்பாண்டி, கீழப்பாவூர் யூனியன் துணைத்தலைவர் உத்திரகுணபாண்டியன், ஒன்றிய குழு உறுப்பிணப் ராஜசேகரபாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். குலசேகரப்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் இளங்கோ அனைவரையும் வரவேற்று பேசினார். அதன்பின் தென்காசி எம்.எல்.ஏ. சரத்குமார் பள்ளி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:- கடந்த காலங்களில் பள்ளி மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு நாடு முழுவதும் 6 ஆயிரம் பள்ளிகளை திறந்தவர் பெருந்தலைவர் காமராஜர், பள்ளிக்கு வரும் குழந்தைகளுக்கு சத்துணவு வழங்கியவர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். அதே வழியில் கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் மாணவர்களுக்கு உதவித்தொகை, இலவச சைக்கிள், இலவச கம்ப்யூட்டர், உயர்கல்வி பெறுவதற்கு உதவித்தொகை, போன்ற திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறார். அவரின் ஆட்சி தொடரவேண்டும். முல்லைப் பெரியாறு பிரச்சினையில் மத்திய கேரள அரசின் நிர்பந்தத்திற்கு அடிபணியாமல் உச்சநீதிமன்றத்தின் உத்தரவை அமல்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். என தொடர்ந்து குரல் கொடுத்துவரும் முதல்வருக்கு தமிழக மக்கள் அனைவரும் தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்க வேண்டும். குறும்பலாப்பேரி உயர்நிலைப்பள்ளி தற்போது வாடகை கட்டிடத்தில் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையை மாற்றி இந்த பள்ளிக்கு சொந்த கட்டிடம் கட்ட தமிழக முதல்வர் மூலமாக நவார்டு வங்கி மூலம் செயல்படுத்த நடவடிக்கை மேற்கொள்வேன். கீழப்பாவூர், ஆலங்குளம் பகுதி விவசாயிகளின் கோரிக்கையை செயல்படுத்தும் வகையில் ராமநதி மேல்மட்ட கால்வாய் திட்டத்தை விரைந்து செயல்படுத்த உரிய நடவடிக்கை மேற்

கொள்வேன். இவ்வாறு அவர் பேசினார். அதன்பின் பள்ளி மாணவர்கள் 50 பேர்களுக்கு ரூ 1500 வீதம் கல்வி உதவித்தொகையை வழங்கினார்.

இந்த விழாவில் சமத்துவ மக்கள் கட்சியின் மாநில அமைப்பு செயலாளர் காளிதாசன், நெல்லை மாவட்ட செயலாளர் தங்கராஜ், கீழப்பாவூர் ஒன்றிய செயலாளர் ராமராஜ், மாவட்ட இளைஞரணி செயலாளர் துரை, முன்னாள் ஒன்றிய செயலாளர் காலசாமி, முருகன், செல்வராஜ், மாவட்ட தொழிற்சங்க செயலாளர் ஆறுமுகம், பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் தலைவர் இளமதி, ஆசிரியர்கள் கனிமொழி, பொற்கலை, கோமதி, அல்போன்சா, சாரதா, முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் அருணோதயம் மற்றும் பலர் கலந்து கொண்டனர். அதன்பின் கீழப்பாவூர் யூனியன் நிதி மூலம் அமைக்கப்படும் ரூபாய் 8 லட்சம் செலவிலான சிமெண்ட் சாலை அமைக்கும் பணியை பார்வையிட்டார். எம்.எல்.ஏ. நிதிமூலம் ரூபாய் 10 லட்சம் மூலம் வாறுகால் அமைக்கும் பணியையும் பார்வையிட்டார். அதன்பின் அரியப்பபுரம், அய்யனூர் பகுதியில் பொது மக்களை சந்தித்து கோரிக்கை மனுக்களை பெற்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்