முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புதுவையில் 9 பேருக்கு காலரா பாதிப்பு

புதன்கிழமை, 11 ஜனவரி 2012      தமிழகம்
Image Unavailable

 

புதுச்சேரி, ஜன.11 - புதுவையில் 9 பேருக்கு காலரா நோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் ராமன் கூறினார்.  புதுவை சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் ராமன் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- புதுவையில் குடிநீர் மாசு பட்டுள்ளது. தண்ணீரில் கழிவு நீர் கலந்ததால் வாந்தி-பேதி மயக்கம் ஏற்பட்டு சிலர் புதுவை அரசு மருத்துவமனை மற்றும் ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 

இதில் 9 பேருக்கு காலரா நோய் பாதிப்பு இருப்பது சோதனையில் தெரியவந்துள்ளது. புதுவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களில் 4 பேருக்கும், ஜிப்மரில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களில் 5 பேருக்கும் காலரா இருப்பது தெரியவந்துள்ளது. காலராவால் பாதிக்கப்பட்டவர்கள் தனி வார்டில் அனுமதிக்கப்பட்டு அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த பாதிப்பு முதலியார்பேட்டை, பூமியான்பேட்டை பகுதிகளில் அதிகமாக காணப்படுகிறது. அப்பகுதியில் மருத்துவமுகாம் அமைத்து இது மேலும் பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். மேலும் அப்பகுதி குடிநீரை ஆய்வு செய்து வருகின்றனர். பொதுமக்கள் குடிநீரை காய்ச்சி குடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளோம். மேலும் காய்-கறிகளை உப்பு கலந்த நீரில் சுத்தம் செய்து உட்கொள்ள வேண்டும். வாந்தி-பேதி-மயக்கம் ஏற்பட்டால் புதுவை அரசு மருத்துவமனையை 0413-2336991 மற்றும் அவசர சிகிச்சை எண் 0413-2336050 என்ற எண்களில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தால் உடனடி சிகிச்சை அளிக்கப்படும் என்று கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்