முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அரசியலுக்கு மீண்டும் வரவே மாட்டேன்: நடிகர் கோவிந்தா

புதன்கிழமை, 11 ஜனவரி 2012      சினிமா
Image Unavailable

மும்பை, ஜன.11 - தான் மீண்டும் அரசியலுக்கு வரப்போவதில்லை என்று பிரபல இந்தி நடிகர் கோவிந்தா திட்டவட்டமாக கூறியுள்ளார். பிரபல பாலிவுட் நடிகர் கோவிந்தா சினிமா மற்றும் தொலைக்காட்சி நாடகங்களில் நடித்துவருகிறார். இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அரசியலில் குதித்தார். காங்கிரஸ் கட்சியில் இணைந்த கோவிந்தா, மும்பை வடக்கு எம்.பி. தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் 2004 ம் ஆண்டுமுதல் எம்.பி.யாக பதவி வகித்துவந்தார். கடந்த ஆண்டு இவர் தனக்கு அரசியல் வேண்டாம் என்று கூறி மீண்டும் நடப்பதற்காக மும்பை திரும்பினார். இவர் இப்போது இந்தி சினிமாவில் தீவிரமாக நடித்துவருகிறார். இவர் காமெடி படங்கள் மூலம் ஏற்கனவே உலகப் புகழ்பெற்றவர். ஷோலா அவுர் சப்னம், ஆங்கன், கூலி நம்பர் 1 போன்ற பல்வேறு படங்களில் இவர் கதாநாயகனாக நடித்தவர். இவர் பிரார் நகரில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் கூறுகையில், தான் மீண்டும் அரசியலுக்கு வரவே மாட்டேன் என்றும், அரசியல் எனக்கு ஒரு வாழ்க்கையே அல்ல. ஏதோ சிறிதுகாலம் நான் அரசியலில் இருந்து இருக்கிறேன். மற்றபடி அரசியலில் எனக்கு விருப்பமில்லை. இவர் மீண்டும் அரசியலுக்கு வருவார் என்று சிலர் கருத்து தெரிவித்து இருந்தனர். அந்த கருத்துக்களை பொய்யாக்கும் வகையில் நடிகர் கோவிந்தா தனது உறுதிப்பாட்டை வெளிப்படுத்தி உள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்