முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பென்னிகுவிக்கிற்கு மணிமண்டபம்: சரத்குமார் பாராட்டு

புதன்கிழமை, 11 ஜனவரி 2012      சினிமா
Image Unavailable

 

சென்னை,ஜன.11 - பென்னிகுவிக்கிற்கு மணிமண்டபம் அமைக்க உத்திரவிட்ட முதல்வர் ஜெயலலிதாவுக்கு சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் பாராட்டு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:

முல்லைபெரியாறு அணையைக் கட்டிய ஆங்கிலேயர் பென்னிகுவிக்கிக்கு லோயர்கேம்பில் ரூபாய் ஒரு கோடி செலவில் சிலையும் மணிமண்டபமும் அமைக்க இருப்பதாக தமிழக முதலமைச்சர் அறிவித்திருப்பது மிகவும் மகிழ்ச்சியளிப்பதாக உள்ளது. 1887ல் கட்டத்துவங்கி 1895 கட்டி முடிக்கப்பட்டது. கட்டத்துவங்கியபின் நிதி பற்றாக்குறையால் அணை பாதியிலேயே நின்று விட்டதையறிந்த அந்த கட்டுமான பொறியாளர் மிகவும் வருந்தி இங்கிலாந்தில் உள்ள தனது சொத்துக்களை விற்று அதன் மூலம் கிடைத்த பணத்தில் முல்லைபெரியார் அணையைக்கட்டி முடித்தார் மேற்குத் தொடர்ச்சி மலையில் தொடங்கி மேற்கு நோக்கி கேரளத்தில் கடலில் வீணாக கலந்த நீரை அணைகட்டியதன் மூலம் அதை கிழக்கே திருப்பி விடப் பட்டு மதுரை, திண்டுக்கல், தேனி, சிவகங்கை, ராமநாதபுரம், ஆகிய மாவட்டங்களுக்கு விவசாயத்திற்கும், குடிநீர் பிரச்சனையையும் தீர்த்துவைத்த ஆங்கிலேயர் பென்னிகுவிக் சிலையும், மணிமண்டபமும் அமைப்பதாக தமிழக முதலமைச்சர் அறிவித்திருப்பதற்கு சமத்துவ மக்கள் கட்சியின் சார்பில் பாராட்டுதல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

முல்லைபெரியார் அணைப்பிரச்சனையில் இரு மாநிலங்களுக்கு இடையே நிலவிவரும் சூழ்நிலையில் இந்த சமயோசித முடிவு, கருத்துவேற்றுமை நீங்கி நட்புறவில் எந்த பாதிப்பும் இல்லாமல் சமூகமான நல்லிணக்கத்துடன் வாழ வழிவகுக்கும் என்பது உறுதி. பொதுவாக மணிமண்டபம் அமைப்பது நமது தேசத்தலைவர்களுக்கும், தியாகிகளுக்கும் தான் என்ற மரபில் இருந்து தமிழ்மக்களின் விவசாயத்திற்கு தண்ணீரும், குடிநீர் பிரச்சனையைத் தீர்த்த கர்னல் பென்னிகுவிக் என்ற தனிமனிதனுக்கு நன்றிக்கடனாக இன்று சிலையும், மணிமண்டபமும் அமைக்க அறிவிப்பு வெளியிட்டிருப்பதற்கு பாராட்டுதல்களைத் தெரிவித்துக் கொள்வதில் தமிழகமே பெருமையடைகிறது என்று சரத்குமார் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago