முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாகிஸ்தான் 7 விக்கெட் வித்தியாசத்தில் ஜிம்பாப்வேவை வீழ்த்தியது

புதன்கிழமை, 16 மார்ச் 2011      தமிழகம்
Image Unavailable

 

கண்டி, மார்ச். 16 - உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பல்லேகல்லே நகரில் நடந் த லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அய ர்லாந்து அணியை வீழ்த்தி முன்னிலை பெற்று உள்ளது. குறைந்த ஸ்கோரைக் கொண்ட இந்தப் போட்டியில் பாகிஸ்தான் அணி தரப்பில், துவக்க வீரர் மொகமது ஹபீஸ் மற்றும் அசாத் சபீக் இருவரும் அபாரமாக ஆடி அரை சதம் அடித்து அணிக்கு வெற்றி தேடி த் தந்தனர். 

முன்னதாக பெளலிங்கின் போது, உமர் குல் நன்கு பந்து வீசி ஜிம்பா ப்வே வீரர்களை திணற வைத்தார். சாகித் அப்ரிடி, அப்துல் ரசாக் வகாப் ரியாஸ் மற்றும் மொகமது ஹபீஸ் ஆகியோர் அவருக்கு ஆதர வாக பந்து வீசினர். 

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் 33 - வது லீக் ஆட்டம் இல ங்கையில் கண்டி அருகே உள்ள பல்லேகல்லே சர்வதேச அரங்கத்தில் நடந்தது. இதில் பாகிஸ்தான் மற்றும் ஜிம்பாப்வே அணிகள் மோதின. 

இந்தப் போட்டியில் டாசில் வெற்றி பெற்ற ஜிம்பாப்வே அணி முதலி ல் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. அந்த  அணி சார்பில், டெய்லர் மற் றும் சக்கப்வா இருவரும் ஆட்டத்தை துவக்கினர். 

ஜிம்பாப்வே  அணி இறுதியில், 39.4 ஓவரில் அனைத்து விக்கெட்டையு ம் இழந்து 151 ரன்னை எடுத்தது. அந்த அணி சார்பில், ஒரு வீரர் அரை சதமும், ஒரு வீரர் கால் சதமும் அடித்தனர். 

அந்த அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனான எர்வின் அதிகபட்ச மாக, 82 பந்தில் 52 ரன்னை எடுத்தார். இதில் 5 பவுண்டரி அடக்கம். இறுதியில் அவர் மொகமது ஹபீஸ் வீசிய பந்தில் கிளீன் போல்டாகி வெளியேறினார். 

அடுத்தபடியாக, கேப்டன் சிகும்புரா 46 பந்தில் 32 ரன்னை எடுத்தார். இதில் 2 பவுண்டரி அடக்கம். தவிர, விக்கெட் கீப்பர் டைபு 19 ரன்னையும், லேம்ப் 16 ரன்னையும், உத்செயா 18 ரன்னையும் எடுத்தனர். 

பாகிஸ்தான் அணி சார்பில் வேகப் பந்து வீச்சாளர் உமர் குல் வெகு நேர்த்தியாக பந்து வீசி 36 ரன்னைக் கொடுத்து 3 விக்கெட் எடுத்தார். தவிர, சாகித் அப்ரிடி, அப்துல் ரசாக், வாகாப் ரியாஸ் மற்றும் மொக மது ஹபீஸ் ஆகியோர் தலா ஒரு விக்கெட் எடுத்தனர். 

பாகிஸ்தான் அணி 38 ஓவரில் 162 ரன்னை எடுத்தால் வெற்றி பெறலா ம் என்ற இலக்கை ஜிம்பாப்வே அணி வைத்தது. அடுத்து களம் இறங் கிய அந்த அணி 34.1 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்னை எடுத் தது. 

இதனால் பாகிஸ்தான் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்த லீக்கில் வெற்றி பெற்றது. இதன் மூலம் பாகிஸ்தான் அணிக்கு 2 வெற்றிப் புள் ளிகள் கிடைத்தது குறிப்பிடத்தக்கது. 

பாகிஸ்தான் அணி தரப்பில், 3 -வது வீரராக இறங்கிய அசாத் சபீக் அபாரமாக பேட்டிங் செய்து 97  பந்தில் 78 ரன்னை எடுத்து இறுதிவ ரை ஆட்டம் இழக்காமல் இருந்தார். இதில் 7 பவுண்டரி அடக்கம். 

துவக்க வீரர் மொகதமது ஹபீஸ் 65 பந்தில் 49 ரன்னை எடுத்தார். இதி ல் 6 பவுண்டரி அடக்கம். இறுதியில் அவர் உத்செயா வீசிய பந்தில் பிரைசிடம் கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்பினார். 

ஜிம்பாப்வே அணி சார்பில், பிரைஸ் 21 ரன்னைக் கொடுத்து 2 விக்கெ ட் எடுத்தார். உத்செயா 24 ரன்னைக் கொடுத்து 1 விக்கெட் எடுத்தார். இந்தப் போட்டியின் ஆட்டநாயகனாக உமர் குல் தேர்வு செய்யப்பட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்