முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நக்கீரன் மீது நடவடிக்கை: அ.தி.மு.க. எம்.எல்.ஏக்கள் புகார்

வியாழக்கிழமை, 12 ஜனவரி 2012      அரசியல்
Image Unavailable

 

மதுரை,ஜன.12 - தமிழக முதல்வர் பற்றி அவதூறு செய்தி வெளியிட்ட நக்கீரன் வார இதழ் மீது உடனடி நடவடிக்கை எடுக்க கோரி மதுரை புறநகர் மாவட்ட எஸ்பியிடம் அதிமுக எம்எல்ஏக்கள் நேற்று புகார் மனு கொடுத்தனர்.  தமிழக முதல்வர் ஜெயலலிதா பற்றி அவதூறு செய்தி வெளியிட்ட நக்கீரன் வார இதழ் ஆசிரியர் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரி மதுரை புறநகர் மாவட்ட அதிமுக சார்பில் புறநகர் மாவட்ட செயலாளர் எம்.முத்துராமலிங்கம் தலைமையில் எம்எல்ஏக்கள் மேலூர் ஆர்.சாமி, கே.தமிழரசன், எம்.வி.கருப்பையா மற்றும் அதிமுகவினர் நேற்று புறநகர் மாவட்ட எஸ்பி அஸ்ராகார்க்கிடம் புகார் மனு கொடுத்தனர். இதில் மதுரை மாவட்ட ஊராட்சி தலைவர் தர்மராஜா, ஒன்றிய செயலாளர்கள் தக்கார் பாண்டி, செ.முருகேசன், மேற்கு ஒன்றிய சேர்மன் கணவர் தனபால், மேற்கு ஒன்றிய துணை சேர்மன் கார்த்திகேயன், மதுரை புறநகர் மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் எஸ்.முருகன், மாவட்ட கவுன்சிலர் கள்ளந்திரி சேகர், வழக்கறிஞர்கள் தி.கோபி, ரமேஷ், மேலூர் நகராட்சி தலைவர் சரவணன், மாவட்ட கவுன்சிலர்கள் பூமிநாதன்,கருப்பையா, ஒன்றிய துணை செயலாளர் கருணாமூர்த்தி, ஒன்றிய பேரவை இணை செயலாளர் திருமாறன், ஒன்றிய மாணவரணி செயலாளர் பாலமுருகன் மற்றும் திரளான அதிமுகவினர் கலந்து கொண்டனர்.

    புகார் மனு குறித்து மதுரை புறநகர் மாவட்ட அதிமுக செயலாளர் எம்.முத்துராமலிங்கம் எம்எல்ஏ நிருபர்களிடம் கூறியதாவது, தமிழ்நாட்டு மக்களை பாதுகாப்பதற்காக 24 மணிநேரமும் அயராது உழைத்துக்கொண்டிருக்கும் தமிழக முதல்வர் அம்மா பற்றி தவறான பொய்யான செய்தியை வெளியிட்டு அவதூறு பரப்பிய மஞ்சள் பத்திரிகை நக்கீரன் வார இதழின் ஆசிரியர் மற்றும் பொறுப்பாளர்கள் மீது உடனடி நடவடிக்கை மேற்கொண்டு  அவர்கள் அனைவரையும் கைது செய்து சட்டரீதியான உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென மதுரை புறநகர் மாவட்ட அதிமுக மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் சார்பில் மதுரை புறநகர் மாவட்ட எஸ்பியிடம் புகார் மனு கொடுத்துள்ளோம். இந்த புகார் மனுவை ஏற்று மாவட்ட எஸ்பி உடனடி நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதி அளித்துள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago