முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நக்கீரன் கோபால் மீது உயர்நீதிமன்றத்தில் முதல்வர் வழக்கு

வியாழக்கிழமை, 12 ஜனவரி 2012      அரசியல்
Image Unavailable

 

சென்னை, ஜன.12 - தன்னைப்பற்றி அவதூறாக செய்தி வெளியிட்டு கோர்ட் அவமதிப்பு செய்த நக்கீரன் கோபால், இணை ஆசிரியர் காமராஜ் மீது கோர்ட் அவமதிப்பு சட்டத்தின் கீழ் தண்டிக்க வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதா உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். கடந்த வாரம் வெளியான நக்கீரன் வார இதழில் முதல்வர் ஜெயலலிதா பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் அவதூறு செய்தி வெளியானது. இதனால் ஆவேசமடைந்த அ.தி.மு.க. தொண்டர்கள் வார இதழ் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் செய்தனர். அந்த வார இதழையும் எரித்து கைதாகினர். அவதூறு செய்தி வெளியிட்ட நக்கீரன் கோபால் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.  

இதனிடையே முதல்வர் ஜெயலலிதா தன்னைப் பற்றி அவதூறு செய்தி வெளியிட்ட வார இதழ் ஆசிரியர் நக்கீரன் கோபால் மற்றும் இணை ஆசிரியர் காமராஜ் ஆகியோர் மீது நீதிமன்ற அவமதிப்பு சட்டத்தின் கீழ் தண்டிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். 

அவர் நேற்றும் தாக்கல் செய்த மனுவில் குறிப்பிட்டிருப்பதாவது:-

தன்னைப்பற்றி செய்தி செய்தி வெளியிட, விற்பனை செய்திட தடை விதிக்க வேண்டும்,  தனிப்பட்ட வாழ்க்கையை பற்றி செய்தி வெளியிடுவதாக இருந்தால் அனுமதி பெற்றே வெளியிட வேண்டும்,  செய்திகளை தொலை நகல் மூலம் விளக்கம் பெற்ற பின்னரே வெளியிட வேண்டும் என்று கடந்த 2006-ம் ஆண்டு உயர்நீதிமன்றம் நக்கீரன் இதழுக்கு உத்தரவிட்டிருந்தது. 

நக்கீரன் இதழில் வெளியான செய்தி அவதூறானது. எனது நற்பெயருக்கு மட்டுமின்றி எனது மதிப்பு மரியாதைக்கு களங்கம் ஏற்படுத்தியுள்ளது. தனிப்பட்ட வாழ்க்கையை பாதிக்கும் விதமாக அமைந்துள்ளது. இந்த பொய்யான அவதூறான செய்தி தவறான எண்ணத்தை மக்கள் மனதில் உருவாக்கி உள்ளது. அவசியல் அமைப்பு சட்டத்தில் கொடுக்கப்பட்டுள்ள தனி மனித சுதந்திரம் பாதிக்கும் வகையில் செய்தி அமைந்துள்ளது. உயர்நீதிமன்ற உத்தரவை மீறி செய்தி வெளியிட்ட நக்கீரன் கோபால், இணை ஆசிரியர் காமராஜ் ஆகியோர் மீது நீதிமன்ற அவமதிப்பு சட்டத்தில் தண்டிக்க வேண்டும். தன்னைப் பற்றி செய்தி எழுதிட, விற்பனை செய்திட தடை விதிக்க வேண்டும் என்று அந்த மனுவில் கூறியுள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago