முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜல்லிக்கட்டு நடத்த தடை இல்லை: மதுரை ஐகோர்ட் கிளை

வெள்ளிக்கிழமை, 13 ஜனவரி 2012      தமிழகம்
Image Unavailable

 

மதுரை,ஜன.12 - ஜல்லிக்கட்டு தொடர்பாக மதுரை ஐகோர்ட் கிளையில் நடைபெற்று வந்த வழக்கில் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்கி மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது. விலங்குகள் நலவாரிய உதவி செயலாளர் வினோத்குமார் மதுரை ஐகோர்ட் கிளையில் ஒரு மனுதாக்கல் செய்திருந்தார். அதில் கடந்த ஜூலை மாதம் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் ஒரு அறிவிப்பை வெளியிட்டது. அதில் வன விலங்குகளான சிங்கம், கரடி, புலி ஆகியவற்றுடன் காளை மாடுகளையும் சேர்த்துள்ளது. எனவே வன விலங்கு பாதுகாப்பு சட்டப்படி ஜல்லிக்கட்டு நடத்தக்கூடாது. மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் அறிவிப்புக்கு இது எதிரானது. எனவே கலெக்டர்களின் உத்தரவை ரத்து செய்து ஜல்லிக்கட்டு நடத்த தடை விதிக்க வேண்டும் என்று கூறியிருந்தார். தமிழக வீரவிளையாட்டு பேரவையை சேர்ந்த அம்பலத்தரசு என்பவர் மத்திய சுற்றுச்சூழல் துறையின் அறிவிப்பு ஆணையை ரத்து செய்து ஜல்லிக்கட்டு நடத்த உத்தரவிட வேண்டும் என்று மனு தாக்கல் செய்திருந்தார்.

     இந்த இரண்டு மனுக்களும் நீதிபதிகள் சித்ரா வெங்கட்ராமன், தேவதாஸ் ஆகியோர் முன்னிலையில் நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது. மத்திய அரசு சார்பில் வக்கீல் கோயல் ஆஜராகி வாதாடும் போது, காளைகள் காட்சி பொருட்கள் அல்ல. ஜல்லிக்கட்டு நடத்தினால் உயிரிழப்புக்கள் ஏற்படுகிறது. காளைகளும் பொதுமக்களும் பாதிக்கப்படுகிறார்கள். எனவே ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்க வேண்டும் என்றார். மத்திய அரசு வக்கீல் ரவிச்சந்திரன் வாதிடுகையில் இது போன்ற 2 வழக்குகளிலும் உச்சநீதிமன்றம் சில ஆலோசனைகளை வழங்கியுள்ளது. தமிழக சட்டசபையிலும் ஜல்லிக்கட்டு பாதுகாப்பு சட்டம் இயற்றப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது என்றார். அப்போது நீதிபதிகள் குறுக்கிட்டு கடந்த ஆண்டு ஜூலை மாதம் வெளியிடப்பட்ட அறிவிப்பு ஆணைக்கு இவ்வளவு காலதாமதமாக இப்போது மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எனவே மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க 2 வாரகாலம் அவகாசம்  வழங்கலாமா என்று கேட்டு வழக்கு விசாரணையை நேற்று தள்ளி வைத்தனர். இதை தொடர்ந்து நேற்று வழக்கு விசாரணை நீதிபதிகள் சித்ரா வெங்கட்ராமன், கருப்பையா ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.  அப்போது தமிழக அரசு வக்கீல் குருகிருஷ்ணகுமார் வாதிடும் போது, ஜல்லிக்கட்டு வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. வன விலங்குகள் நல வாரியம் தனது யோசனைகளை சுப்ரீம் கோர்ட்டிலும் தெரிவித்துள்ளது. இந்த ஜல்லிக்கட்டு குறித்து வன விலங்குகள் நல வாரியம் மாவட்ட நிர்வாகத்திற்கு ஏன் நோட்டீஸ் அனுப்ப வேண்டும் என்றார்.

    மத்திய அரசு வழக்கறிஞர் ரவீந்திரன் வாதிடும் போது, கடந்த 3 ஆண்டுகளில் ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டதில் 42 பேர் இறந்துள்ளனர் அதனால் ஜல்லிக்கட்டுக்கு தடைவிதிக்க கோருகிறோம் என்றார். வக்கீல் அஜ்மல் வாதிடும் போது, 15ம் தேதி அவனியாபுரத்திலும், 16ம் தேதி பாலமேட்டிலும், 17ம் தேதி அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. இங்கு காளைகள் அவிழ்த்துவிட மாட்டாது. சுப்ரீம் கோர்ட் நிபந்தனைகளை கண்டிப்புடன் கடைபிடிக்கப்படும் என்றார். இதை தொடர்ந்து வக்கீல்கள் வாதத்திற்கு பிறகு நீதிபதிகள் சித்ரா வெங்கட்ராமன்,கருப்பையா ஆகியோர் பிறப்பித்த உத்தரவில் கூறியதாவது, ஏற்கனவே திட்டமிட்டபடி வருகிற 15,16,17 ஆகிய தேதிகளில் ஜல்லிக்கட்டு நடத்திக்கொள்ளலாம். ஜல்லிக்கட்டு நடத்தப்பட்ட விதம் தொடர்பான விரிவான அறிக்கை மற்றும் வீடியோ பதிவுகளை வருகிற 20 ம்தேதி தாக்கல் செய்ய வேண்டும். மத்திய அரசு சாகச மிருகங்கள் பட்டியலில் காளைகளையும் சேர்த்து விளையாட்டில் பயன்படுத்த தடை விதித்துள்ளது. இதற்கு முன்பு மாநில அரசு இந்திய பாதுகாப்பு சட்டத்தில் சாகச மிருகங்கள் பட்டியலில் காளைகள் இடம்பெறவில்லை. மத்திய அரசின் இந்த அறிவிப்பு செல்லுமா, செல்லாதா என்பது குறித்து ஐகோர்ட் பின்னர் முடிவு செய்யும். இந்த வழக்கு விசாரணை வருகிற 23 ம்தேதிக்கு தள்ளி வைக்கப்படுகிறது என்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago