புதுடெல்லி,மார்.16 - சரக்கு மற்றும் சேவை வரி அரசியல் சட்ட திருத்த மசோதாவுக்கு மத்திய கேபினட் அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்தது. சரக்கு மற்றும் சேவைக்கு பல்வேறு மட்டங்களில் மறைமுகமாக பல கட்டங்களில் எக்சைஸ் மற்றும் சர்வீஸ் வரி விதிக்க வகை செய்யும் இந்த மசோதா பல முறை வடிவமைக்கப்பட்டு மாநிலங்களின் கருத்து அறியப்பட்டது. இந்த மசோதாவானது மாநிலங்களின் சுயாட்சியை பாதிக்கிறது என்று கூறி மாநிலங்கள் நிராகரித்துவிட்டன. இதனையொட்டி இந்த அரசியல் சட்ட திருத்த மோசாதாவில் மேலும் பல திருத்தங்கள் செய்யப்பட்டன. அதன்பிறகு நேற்று பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் நடந்த மத்திய கேபினட் அமைச்சரவை கூட்டத்தில் இந்த சரக்கு மற்றும் சேவை வரி திருத்த மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. ஆனால் மத்திய சட்ட அமைச்சகம் கேட்டுக்கொண்டதிணங்க பல திருத்தங்கள் இந்த மசோதாவில் செய்யப்பட்டதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. விரைவில் இந்த மசோதாவை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்று கூட்டத்திற்கு பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்த ஒரு அமைச்சர் தெரிவித்தார்.
- குன்றக்குடி தங்க விமானம்.
- கோயம்புத்தூர் பாலதண்டாயுதபாணி யானை வாகனத்தில் புறப்பாடு.
- திருப்பரங்குன்றம் ஆண்டவர் தெப்போற்சவம். இரவு தங்கத்தேரில் பவனி.
- மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் காலை தந்தப்பல்லக்கு, மாலை தங்கக்குதிரை வாகனத்தில் பவனி.
- திருச்சேறை நாரநாதர் இராமாவதாரம். இரவு அனுமார் வாகனத்தில் திருவீதி உலா.