முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இங்கிலாந்தில் மேலும் 2 இந்தியர்கள் படுகொலை

வெள்ளிக்கிழமை, 13 ஜனவரி 2012      இந்தியா
Image Unavailable

 

லண்டன், ஜன.13 - இங்கிலாந்தில் இனவெறி படுகொலைகள் அதிகரித்து வருகின்றன. இதற்கு தற்போது மேலும் இரண்டு இந்தியர்கள் பலியாகியுள்ளனர். கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் இந்தியர்கள் இனவெறியர்களால் கொல்லப்படுவதும், தாக்கப்படுவதும் தொடர்ந்து நடைபெற்று வந்தது.  இந்திய அரசு இதற்கு கடும் கண்டனம் தெரிவித்தது. இதனை அடுத்து ஆஸ்திரேலியாவில் படிக்கச் செல்லும் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்தது. இதையடுத்து ஆஸ்திரேலிய அரசு இந்தியர்களுக்கும் இந்திய மாணவர்களுக்கும் உரிய பாதுகாப்பு அளிக்கப்படும் என்று உறுதி அளித்தது.  இதையடுத்து ஆஸ்திரேலிய அரசு எடுத்த நடவடிக்கைகளால் அங்கு இனவெறி கொலைகள் படிப்படியாக குறைந்துள்ளன. 

இந்நிலையில் இங்கிலாந்தில் இத்தகைய இனவெறி கொலைகள் துவங்கியுள்ளன. கடந்த வாரத்தில் இந்திய மாணவர் அனுஜ்பித்வே (23)என்ற இந்திய மாணவர் மான்செஸ்டர் நகரில் மர்ம மனிதர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இச்செயலுக்கு இந்திய வெளியுறவுத்துறை தனது கடும் கண்டனத்தை தெரிவித்தது. மேலும் அனுஜ் பித்வேயின் உடலை இந்தியா கொண்டுவருவதற்கும் உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டன. 

லண்டன் அருகேயுள்ள பர்மிங்ஹாம் நகரில் அவதார்சிங் கோலார் (62) என்ற இந்தியர்  தமது மனைவி கரோல்(58) உடன் வசித்துவந்தார். அவதார்சிங் இங்கிலாந்தில் குடியுரிமை பெற்றவர். இந்நிலையில்  கணவன் மனைவி இருவரும் அவர்களது வீட்டிலேயே கொலைசெய்யப்பட்டு கிடந்துள்ளனர். அவதார்சிங் இங்கிலாந்து குடியுரிமை பெற்றவர். இவரது மனைவி கரோலினின் சொந்த நாடு இங்கிலாந்து தான். இவர்களது மகன் லண்டன் காவல்துறையில் பணியாற்றி வருகிறார். இவர்களது உடலில் பயங்கர ஆயுதங்களால் தாக்கப்பட்ட அடையாளங்களும், துப்பாக்கி குண்டுகள் துளைத்த காயங்களும் இருந்தன. 

மேலும் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு காணாமல் போன இந்திய மாணவரின் உடல் நேற்று மான்செஸ்டர் நகரில் கண்டெடுக்கப்பட்டது. குர்தீப் ஹயர் என்ற அந்த மாணவர் காணாமல் போனதையடுத்து தேடப்பட்டு வந்தார். இந்நிலையில் அவரது உடல் தற்போது கிடைத்துள்ளது. இந்த கொலைகள் அனைத்தும் இனவெறி கொலைகளாகவே இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதையடுத்து கடந்த இரண்டு வாரங்களில் இனவெறிக்கு பலியான இந்தியர்களின் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்