முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டம்: முதல்வருக்கு பாராட்டு

வியாழக்கிழமை, 12 ஜனவரி 2012      அரசியல்
Image Unavailable

சென்னை, ஜன, 13 - தமிழக முதல்வர் ஜெயலலிதா குறித்து அவதூறு செய்தி வெளியிட்ட நக்கீரன் கோபாலையும், இணை ஆசிரியர் காமராஜையும் உடனே கைது செய்ய வேண்டும் என்று அ.தி.மு.க மருத்துவ அணி காவல் துறையை வலியுறுத்தியுள்ளது. சென்னையில் அ.தி.மு.க தலைமையகத்தில் அ.தி.மு.க மருத்துவ அணியின் மாவட்ட செயலாளர்களின் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு மருத்துவ அணியின் மாநில தலைவர் டாக்டர் மைத்ரேயன் எம்.பி. தலைமை வகித்தார். மாநில செயலாளர் டாக்டர் வேணுகோபால் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர் விஜய், கைத்தறித்துறை அமைச்சர் சுந்தரராஜ் கலந்து கொண்டார்.

மேலும் அமைப்பு சாரா ஓட்டுனர்கள் சங்க மாநில செயலாளர் கமலக் கண்ணன், அனைத்துலக எம்.ஜி.ஆர் மன்ற மாநில செயலாளர் தமிழ்மகன் உசேன், விவசாயிகள் பிரிவு செயலாளர் துறை; கோவிந்தராஜன், சுலோசனா சம்பத் ஆகியோரும் பங்கேற்றனர்.

மேலும் டாக்டர் விஜய் பாஸ்கர், டாக்டர் சரோஜா மற்றும் மாவட்ட மருத்துவ அணியின் செயலாளர்கள் ஆகியோரும் பங்கேற்றனர்.

 

கூட்டத்தில் கீழ்கண்டத் தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன. தீர்மானங்கள் விபரம் வருமாறு:- 

 

தீர்மானம்: 1

 

2011 சட்டமன்ற பொதுத் தேர்தலில், விஞ்ஞான ஊழலின் ஊற்றுக்கண், ஸ்பெக்டரம் ஊழலுக்கு அஸ்திவாரமாக இருந்த கருணாநிதி மற்றும் அவரது குடும்பத்தினர் ஆட்டத்தை நிறுத்தி, என்றும் தமிழக மக்களுக்கு நன்மை செய்யும், தமிழ் நாட்டிற்கு ஏற்படும் எந்தொரு பிரச்சனையாக இருந்தாலும் முதலில் குரல் கொடுக்கும் ஜெயலலிதா அவர்களை, தமிழகத்தின் ஆட்சி பீடத்தில் அமர்த்திய தமிழக மக்களை, அ.தி.மு.க. மருத்துவ அணி, தனது நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறது.

மேலும், நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில், மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூராட்சி அளவில், கழகத்திற்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியினை தந்த, தமிழக மக்களுக்கு மீண்டும் ஒரு முறை கழக மருத்துவ அணி தனது நன்றியினை தெரிவித்துக் கொள்கிறது.

 

தீர்மானம்: 2

 

தமிழகத்தை ஆண்ட மைனாரிட்டி தி.மு.க அரசு, புதிய தலைமைச் செயலகம், என்ற பெயரில் பல கோடி ரூபாய் மக்கள் பணத்தை செலவழித்து, அறைகுறையாக, பாதுகாப்பின்றி கட்டி முடித்த கட்டிடத்தை, தமிழக முதலமைச்சரை தமிழக முதல்வராக பொறுப்பேற்ற உடன், பாதுகாப்பின்றி இருக்கும் கட்டிடத்தை பாதுகாப்புடன் கட்டி முடிக்கவும், அதற்கு மேல் அனைவரும் பயனளிக்கும் வகையில் டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நிகராக, புதிய மருத்துவமனையாக மாற்றி அமைத்து, என்றும் மக்களுக்கு பாதுகாப்பாக இருப்பேன் என்று அனைவருக்கும் உணர்த்தி காட்டிய, தமிழக முதல்வரை அ.தி.மு.க. மருத்துவ அணி நன்றி தெரிவித்து, பாராட்டி வணங்குகிறது.

 

தீர்மானம்: 3

 

தமிழகத்தின் தென் மாவட்டத்தின் வாழ்வாதாரமான முல்லை பெரியாறு அணை விவகாரத்தில், தமிழக முதல்வர் ஜெயலலிதா, எவ்வித வற்புறுத்தலுக்கும் அடி பணியாமல், உச்ச நீதி மன்றம் மட்டும்தான் தமிழகத்திற்கு நியாயமான தீர்ப்பை வழங்கும் என்று முடிவெடுத்த, தமிழக முதல்வருக்கு அ.தி.மு.க மருத்துவ அணி தனது நன்றி தெரிவித்து வணங்குகிறது.

 

தீர்மானம்: 4

 

`தானே' புயல் தமிழகத்தை தாக்குவதற்கு முன்பே, சீரிய முனைப்புடன் முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்த தமிழக முதல்வருக்கு அ.தி.மு.க. மருத்துவ அணி, தனது மனமார்ந்த நன்றியினை தெரிவிக்கிறது.

`தானே' புயலால் அதிகம் பாதிப்பிற்குள்ளான கடலூர், விழுப்புரம் மாவட்டங்களுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க ரூபாய் 850 கோடி நிவாரணத் தொகை அளித்து, நேரில் சென்று புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறி, அவர்களின் கண்ணீரை துடைத்த தாய் உள்ளம் கொண்ட தமிழக முதலமைச்சரை, அ.தி.மு.க. மருத்துவ அணி வாழ்த்துகிறது.

 

தீர்மானம்: 5

 

முதல்வர் ஜெயலலிதா, தமிழகத்தில் உள்ள ஏழை-எளிய மக்களின் உயிர் காக்கும் உன்னத நோக்கோடு, தாயுள்ளத்தோடு, வழங்கியுள்ள திட்டம்தான், முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டம். வரலாற்று சிறப்பு மிக்க விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தை வழங்கிய முதல்வருக்கு அ.தி.மு.க. மருத்துவ அணி நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறது.

அதிலும் குறிப்பாக, ஒரு குடும்பத்திற்கு ரூபாய் 1 லட்சம் வீதம், 4 வருடங்களுக்கு ரூபாய் 4 லட்சம் வழங்குவதற்குண்டான வழி வகையும், குறிப்பிட்ட சிகிச்சை முறைகளுக்கு ஒரு வருடத்திற்கு ரூபாய் 1,50,000 லட்சம் வரை வழங்கிடவும்,

மொத்தம் 1016 சிகிச்சை முறைகளும், 113 தொடர் சிகிச்சை வழி முறைகளும், 23 நோய் அறிதல் கண்டுபிடிப்பு முறைகளுக்கு வழி வகைகளும், செய்ததோடு, பயனாளிக்கும் புதிய மருத்துவ காப்பீட்டு அட்டை வழங்கி, 1 கோடியே 34 லட்சம் குடும்பங்கள் பயன்படக்கூடிய உன்னத திட்டத்தை தந்த, தமிழக முதல்வருக்கு அ.தி.மு.க. மருத்துவ அணி நன்றியை காணிக்கையாக்குகிறது.

 

தீர்மானம்: 6

 

கழகத்தின் நிரத்தரப் பொதுச் செயலாளர், தமிழக முதலமைச்சர்ஜெயலலிதா தலைமையில், தமிழகத்தில் நல்லாட்சி மலர்ந்திட்ட நாள் முதல், தீயசக்தி கருணாநிதியின் தூண்டுதலின்பேரில், பத்திரிக்கை சுதந்திரம் என்கின்ற பதத்தை தவறாக பயன்படுத்தி, பொய் செய்திகளையும், அவதூறு செய்திகளையும் வெளியிடும், மஞ்சள் பத்திரிக்கை நக்கீரனின் ஆசிரியர் மற்றும் இணை ஆசிரியர் ஆகியோரை உடனடியாக கைது செய்யவும், அந்த பத்திரிக்கையை தடைசெய்யவும் ஏற்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு, காவல் துறையை வலியுறுத்தி ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago