முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முதல்முறையாக `க்ரூஸர்' படகுகள் வெள்ளோட்டம்

வெள்ளிக்கிழமை, 13 ஜனவரி 2012      அரசியல்
Image Unavailable

 

கல்பாக்கம், ஜன.13 - கல்பாக்கம் அடுத்த முதலியார் குப்பம் மழைத்துளி படகு குழாமில் 32 இருக்கைகள் கொண்ட க்ரூஸர் வகை படகினை சுற்றுலாத்துறை அமைச்சர் எஸ் கோகுல இந்திரா நேற்று (12.01.2012) கொடியசைத்து துவக்கி வைத்தார். இப்படகு 12 இலட்ச ரூபாய் செலவில் வாங்கப்பட்டுள்ளது இதன் நீளம் 10 மீட்டர், அகலம் 3.5 மீட்டர், இன்ஜின்திறன் 40 குதிரை திறன் கொண்டதாகும். தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் சுற்றுலாப் பயணிகளுக்காக முட்டுகாடு, முதலியார் குப்பம், பிச்சாவரம், ஏற்காடு, ஊட்டி, பைக்கரரா, கொடைக்கானல், குற்றாலம், மதுரை ஆகிய ஒன்பது இடங்களில் உள்ள படகுகுழாம்களில் படகு சவாரி நடத்தி வருகிறது. 9 படகு குழாம்களில் மொத்தம் 315 படகுகள் உள்ளன கடந்த ஆண்டில் அதாவது 2011 ஆம் ஆண்டில் மட்டும் சுமார் 25.33 லட்சம் சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது இந்த படகு குழாம் 2003 அ.தி.மு.க. ஆட்சியில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவால் அமைக்கப்பட்டது. இந்த படகு குழாமில் தற்பொழுது 25 மிதி படகுகளும், 10 துடுப்பு படகுகளும், 12 விசைப்படகுகளும், 8 கயாக் படகுகளும்,  2 வாட்டர் ஸ்குட்டர்கள் என 55 படகுகள் உள்ளன. 

படகு வெள்ளோட்டத்தை துவக்கிவைத்து அமைச்சர் பேசுகையில் தமிழக முதல்வர் தமிழ்நாடு சுற்றுலா துறை வளர்ச்சிக்கு நிறைய திட்டங்கள் வகுத்துள்ளார் சுற்றுலா பயணிகளின் வருகையை அதிகரிக்கும் வகையில் தமிழ் நாட்டில் உள்ள அனைத்து படகு குழாம்களிலும் இதுப்போன்று படகு பயன் பாட்டினை. மிக விரைவில் துவக்க இருப்பதாகவும் கூறினார். அமைச்சருடன் சுற்றுலாதுறை இயக்குனர் சந்தோஷ் கே.மிஸ்ரா, சுற்றுலாதுறை செயலாளர் ஜெயக்கொடி, மாவட்ட செயலாளர் சிட்லம்பாக்கம் ராஜேந்திரன், மாவட்ட குழு தலைவர் காஞ்சி பன்னீர் செல்வம், செய்யூர் சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ்.ராஜி, வாலாஜாபாத் கணேசன் எம்.எல்.ஏ. (உத்திரமேரூர்) இடைக்கழிநாடு பேரூராட்சி தலைவர் ஜெ.பாலசுப்பிரமணியம், லத்தூர் ஒன்றிய துணை சேர்மன் பி.ரன்ஜன், திருக்கழுக்குன்றம் ஒன்றிய செயலாளர் எஸ்.ஆறுமுகம், மற்றும் பலர் கலந்துக் கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்