முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அணுமின் நிலைய கதிர்வீச்சால் பாதிப்பு ஏற்படாது

வெள்ளிக்கிழமை, 13 ஜனவரி 2012      அரசியல்
Image Unavailable

 

சென்னை, ஜன. 13 - அணுமின் நிலையங்களின் உலைகள் வெளியிடும் கதிர்வீச்சால் மக்களுக்கு சிறிதளவும் பாதிப்பு ஏற்படாது என இந்திய அணுமின் கழகத் தொழில்நுட்ப இயக்குநர் எஸ்.ஏ. பரத்வாஜ் கூறியுள்ளார். இதுகுறித்த விபரம் வருமாறு:- அணுமின் நிலையங்கள் வெளியிடும் கதிர்வீச்சால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த கருத்தரங்கம் சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற இந்திய அணுமின் கழக தொழில்நுட்ப இயக்குநர் பேசியதாவது:-  

அணு உலைகளால் வெளியிடப்படும் கதிர்வீச்சால் புற்றுநோய் உள்ளிட்ட சில நோய்கள் ஏற்படும் என மக்கள் மத்தியில் கருத்து நிலவி வருகிறது. இது முற்றிலும் தவறான எண்ணம் ஆகும்.

கதிர்வீச்சு என்ற சொல் நெடுங்காலமாகவே மக்களுக்கு பீதியை உண்டாக்கி வருகிறது. எனவே மக்கள் கதிர்வீச்சு குறித்த முழுமையான அறிவைப் பெற வேண்டியது அவசியம்.

மியில் இயற்கையாகவே கதிர்வீச்சுகள் உருவாகி மனிதர்களைச் சென்றடைகின்றன. இது தவிர்க்க முடியாத ஒன்றாகும். ர், மணல், கல் என அன்றாடம் பயன்படுத்தப்படும் பொருள்களில் இருந்தும் கதிர்வீச்சுகள் வெளிப்படுகின்றன. இவை மனிதர்களுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்துவதில்லை. மனித உடலில் உள்ள பொட்டாசியம், ரேடியம் ஆகிய வேதிப் பொருள்கள் கதிர்வீச்சுகளை உண்டாக்குகின்றன. ஆனால், இவற்றால் பாதிப்பு கிடையாது. அதிக அளவிலான கதிர்வீச்சு வெளிப்பாடே உயிரினங்களைப் பாதிக்கும். அத்தகைய கதிர்வீச்சு அணுகுண்டு வெடிப்பின்போது மட்டுமே உருவாகும். அணு உலைகளிலிருந்து வெளிவரும் கதிர்வீச்சு மிகவும் குறைவான அளவே ஆகும்.

உதாரணமாக, இயற்கையாக வெளிப்படும் கதிர்வீச்சின் அளவு ஆண்டுக்கு 2,400 மைக்ரோ சிவெர்ட் அளவும், எக்ஸ்​ரே, சி.டி. ஸ்கேன் உள்ளிட்ட மருத்துவக் கருவிகளால் வெளிவரும் கதிர்வீச்சின் அளவு 15 ஆயிரம் மைக்ரோ சிவெர்ட் அளவுமாக உள்ளது.ஆனால், இந்தியாவில் உள்ள அணு உலைகளால் வெளியிடப்படும் கதிர்வீச்சின் அளவு ஆண்டுக்கு 0.42 முதல் ​39.6 மைக்ரோ சிவெர்ட் வரையே உள்ளது. எனவே இந்த குறைந்தபட்ச அளவு கதிர்வீச்சால் மக்களுக்கும், பிற உயிரினங்களுக்கு சிறிதளவு பாதிப்பு கூட ஏற்படாது.

இந்த நிலையில், 1995 முதல் 2010 வரை 15 ஆண்டுகளாக அணுஉலையில் பணிபுரியும் தொழிலாளர் உடல் நலம் குறித்த ஓர் ஆய்வை இந்திய அணுமின் கழகம் நடத்தியது. இதில், அணுக் கதிர்வீச்சால் கடுமையான பாதிப்புகள் இல்லை என்பது தெரியவந்தது. எனவே, மக்கள் அணு உலை குறித்தும், கதிர்வீச்சுகள் குறித்தும் அச்சப்படத் தேவையில்லை.

கல்பாக்கத்தில் அதிவேக ஈனுலை: கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் அதிவேக ஈனுலை ஒன்று நிறுவப்பட உள்ளது. இதனால் மின் உற்பத்தி பன்மடங்கு அதிகரிக்கும். இதற்கான கட்டுமானப் பணிகள் வரும் மார்ச், ஜூன் மாதங்களில் முடிவடையும். இது இந்தியாவிலேயே முதல் அதிவேக ஈனுலை என்பது குறிப்பிடத்தக்கது.மேலும் இதே போல வேறு இடங்களில் இரண்டு ஈனுலைகளை நிறுவ மத்திய அரசு திட்டமிட்டுள்ளது .என அவர்கள் தெரிவித்தனர்.

டாடா நினைவு மைய மருத்துவர் வி.ரங்கராஜன் ; கல்பாக்கம் அணுமின் நிலைய இயக்குநர் கே.ராமமூர்த்தி, பாவினி' திட்ட இயக்குநர் டாக்டர் பிரபோத் குமார், இந்திய அணுமின் கழக தலைமை மருத்துவக் கண்காணிப்பாளர் டாக்டர் எஸ்.கே. ஜெயின், கல்பாக்கம் அணுமின் நிலை ஆராய்ச்சி மைய விஞ்ஞானி பி. செல்லப்பாண்டி ஆகியோர் கருத்தரங்கில் பங்கேற்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்