முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

போஸ்கோ உருக்காலைக்கு ஆதரவான மனு தள்ளுபடி

சனிக்கிழமை, 14 ஜனவரி 2012      இந்தியா
Image Unavailable

 

பெங்களூர்,ஜன.14 - போஸ்கோ உருக்காலை அமைக்க தானாகவே முன் வந்து நிலம் கொடுக்கிறோம் என்று விவசாயிகள் தாக்கல் செய்த பொதுநலன் மனுவை கர்நாடக மாநில ஐகோர்ட்டு தள்ளுபடி செய்துவிட்டது. மாநில அரசை அணுகுமாறு விவசாயிகளை அறிவுறுத்தியுள்ளது. கர்நாடக மாநிலத்தில் உள்ள கடக் மாவட்டத்தில் ரூ. 30 ஆயிரம் கோடி செலவில் போஸ்கோ உருக்காலையை தொடங்க தென் கொரியா முன்வந்தது. இந்த தொழிற்சாலை தொடங்கப்பட்டால் வருடத்திற்கு ஒரு மில்லியன் டன் உருக்காலை உற்பத்தி செய்யப்படலாம். ஆனால் தொழிற்சாலை அமைக்க விவசாயிகள் மற்றும் மதத்தலைவர் ஆகியோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அந்த திட்டத்தை அப்போது முதல்வர் எடியூரப்பா தலைமையில் இருந்த பாரதிய ஜனதா அரசு கிடப்பில் போட்டுவிட்டது. 

இந்தநிலையில் உருக்காலை அமைந்தால் இந்த பகுதியில் வளர்ச்சி ஏற்படுவதோடு இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று கோரி 117 விவசாயிகள், நிலம் கொடுக்க முன்வந்தனர். இதுதொடர்பாக அவர்கள் கர்நாடக மாநில ஐகோர்ட்டில் ஒரு பொதுநலன் மனுவையும் தாக்கல் செய்தனர். இந்த மனுவை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்துவிட்டது. இது தொடர்பாக மாநில அரசை நேரடியாக 15 நாட்களுக்குள் அணுகுமாறு தலைமை நீதிபதி விக்ரம்ஜித் ஜென், நாகரத்னா ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் உத்தரவிட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்