முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜப்பானில் அணு உலை வெடிப்பு - வதந்திகளால் பொதுமக்கள் பீதி

புதன்கிழமை, 16 மார்ச் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, மார்ச்.16 - பூகம்பத்தை தொடர்ந்து சுனாமியினால் தாக்கப்பட்ட ஜப்பானில் மின்சாரம் தயாரிக்கும் அணு உலைகள் அடுத்தடுத்து வெடித்து வருகின்றது. இதனால் கதிர்வீச்சு ஏற்பட்டு வருகிறது. இந்த கதிர்வீச்சு அதிகபட்சமாக 50 கிலோ மீட்டர் பரவும். ஆனால் பல ஆயிர் கிலோ மீட்டருக்கு அப்பால் உள்ள இந்தியாவில் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படும் என்று வீண்புரளி எஸ்.எம்.எஸ். மூலம் நேற்று அனைவரின் செல்போன்களுக்கும் அனுப்பப்பட்டது. உங்களது அன்பானவர்களுக்கு உடனே இந்த எஸ்.எம்.எஸ்.சை அனுப்பி உஷார்படுத்துங்கள் என்று அதில் கூறப்பட்டிருந்தது. அதற்கு வலுசேர்க்கும் விதமாக பிபிசியே இந்த தகவலை தெரிவித்துள்ளது என்றும் அந்த எஸ்.எம்.எஸ்.சில் குறிப்பிடப்பட்டிருந்தது.

ஜப்பான் நாட்டில் nullகம்பம், சுனாமி ஏற்பட்டதை தொடர்ந்து அணு உலைகள் வெடித்து கதிர்வீச்சு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு கதிர்வீச்சு அபாயம் அதிகரித்து வரும் நிலையில் அதை தொடர்புபடுத்தி சென்னையில் நேற்று எஸ்.எம்.எஸ்.​ல் பல்வேறு வதந்தி பரவியது. ஜப்பானில் கதிர்வீச்சு பரவி உள்ளதால் அது மழை மேகங்கள் வரை சென்றுள்ளது. எனவே சென்னையில் அமில மழை பெய்யும். அந்த மழையில் நனைந்து விடாதீர்கள். மழையில் நனைந்தால் உடல் வெந்து கொப்பளங்களாகி விடும். கதிர்வீச்சு பாதித்த மழையால், தோல் நோய் வரலாம். புற்றுநோய் கூட தாக்கும் என்று எஸ்.எம்.எஸ். தகவலில் பீதி கிளப்பப்பட்டுள்ளது. 

ஜப்பானில் சுனாமி தாக்கியதால் அணு உலைகள் வெடிக்கின்றது. இதைப்பயன்படுத்தி பெரும் ஆபத்து சூழப்போவதாக செல்போன் எஸ்.எம்.எஸ். மூலம் வீண் வதந்திகளை பரப்பி வருகின்றனர். இதனால் பொதுமக்கள் பீதியில் உள்ளனர்.

ஆனால் கதிர்வீச்சுக்கும், மழைக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று விஞ்ஞானிகள் கூறி உள்ளனர். எஸ்.எம்.எஸ்.சில் பரவும் இத்தகைய வதந்திகளை நம்ப வேண்டாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்