முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இஸ்லாமிய மாணவர் இயக்கத்தின் மீதான தடை நீட்டிப்பு

சனிக்கிழமை, 14 ஜனவரி 2012      இந்தியா
Image Unavailable

புது டெல்லி, ஜன. 14 - இந்திய இஸ்லாமிய மாணவர் இயக்கத்தின் (சிமி) மீதான தடை மேலும் இரு ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கு சட்ட அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. சிமி இயக்கத்தின் தடை பிப்ரவரி மாதம் 7 ம் தேதியுடன் நிறைவடைகிறது. இதையடுத்து அந்த இயக்கத்தை மேலும் இரு ஆண்டுகளுக்கு தடை செய்ய வேண்டும் என சட்ட அமைச்சகத்தை உள்துறை அமைச்சகம் கேட்டுக் கொண்டது. இந்த ஒப்புதல் டில்லி ஐகோர்ட்டால் உறுதி செய்யப்படவுள்ளது. பல்வேறு தீவிரவாத செயல்களில் ஈடுபட்டு வந்த சிபி இயக்கம் கடந்த 2001 ம் ஆண்டு தடை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்