முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மோடி மீது நடவடிக்கை: டி.ஜி.பி. பிரமாண பத்திரம் தாக்கல்

சனிக்கிழமை, 14 ஜனவரி 2012      இந்தியா
Image Unavailable

ஆமதாபாத்,ஜன.14 - குஜராத் மாநிலத்தில் நடைபெற்ற இனக்கலவரத்தை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்காத அப்போதும் முதல்வராக இருந்த நரேந்திர மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி நானாவதி கமிஷன் முன்பு மாநில முன்னாள் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெனரல் ஆர்.பி.ஸ்ரீகுமார் பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளார்.  அயோத்தியில் நடந்த கரசேவையில் கலந்துகொண்டுவிட்டு குஜராத் மாநிலத்திற்கு ரயிலில் திரும்பிக்கொண்டியிருந்தபோது கோத்ராவில் ரயிலுக்கு தீ வைத்ததில் கரசேவகர்கள் 30-க்கும் மேற்பட்டவர்கள் பலியானார்கள். இதனையொட்டி குஜராத் மாநிலத்தில் இனக்கலவரம் நடைபெற்றது. இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பலியானார்கள் மற்றும் ஏராளமானோர் படுகாயம் அடைந்தனர். இந்த கலவரம் குறித்து நானாவதி கமிஷன் விசாரணை நடத்தி வருகிறது. நேற்று முன்தினம் நடைபெற்ற விசாரணையின் போது மாநில முன்னாள் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெனரல் ஆர்.பி. ஸ்ரீகுமார் ஆஜராகி 9-வது தடவையாக பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்தார். அதில் இனக்கலவரத்தை தடுக்க நடவடிக்கை எடுக்க தவறிய முதல்வர் நரேந்திர மோடி, முன்னாள் உள்துறை அமைச்சர் மற்றும் பலர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. கடந்த 2002-ம் ஆண்டு நடைபெற்ற இந்த கலவரத்தின்போது குஜராத் மாநிலத்தில் து ணை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெனரலாக ஸ்ரீகுமார் இருந்தார். முதல்வர் நரேந்திர மோடி, அப்போது இருந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெனரல், முன்னாள் உள்துறை அமைச்சர் மற்றும் பலர் மீது இந்திய குற்றவியல் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டும். கலவரம் விஷயத்தில் நான் அறிக்கையில் கூறப்பட்டிருப்பது போல் கிரிமினல் நீதி முறை தவறுதலாக பயன்படுத்தப்பட்டுள்ளது. இது குறித்து அரசுக்கு நான் அனுப்பியுள்ள அறிக்கை பற்றியும் முதல்வர் நரேந்திர மோடிக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. கலவரத்தின் போது இருந்த ஒரு அசாதரண சூழ்நிலை பற்றி அப்போது இருந்த உள்துறை அதிகாரிகளுக்கும் போலீஸ் டி.ஜி.பி.க்கும் நன்றாகவே தெரியும். என்னுடைய அறிக்கையில் கூறப்பட்டுள்ளவைகள் குறித்து அரசு எந்தவித கேள்வியும் கேட்கவில்லை. அறிக்கையில் கூறப்பட்டுள்ள விஷயங்களுக்கு ஆதாரங்கள் எதுவும் இருக்கிறதா என்பது குறித்தும் எனது மூத்த அதிகாரிகள் கூட எதுவும் கேட்கவில்லை. அதனால் எனது அறிக்கையை அரசு ஏற்றுக்கொண்டது என்பதற்கு எதுவே சரியான ஆதாரமாகும் என்றும் ஸ்ரீகுமார் அந்த பிரமாண பத்திரத்தில் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago