முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாபா ராம்தேவ் முகத்தில் மையை பீச்சிய பா.ஜ. தொண்டர்

ஞாயிற்றுக்கிழமை, 15 ஜனவரி 2012      ஊழல்
Image Unavailable

 

புதுடெல்லி,ஜன.15 - ஊழலுக்கு எதிராக போராடி வரும் குரு பாபா ராம்தேவ் மீது பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த தொண்டர் ஒருவர் மையை பீச்சி அடித்தார். அவரை ராம் தேவ் ஆதரவாளர்கள் தர்ம அடிகொடுத்து போலீசில் ஒப்படைத்தனர். நாட்டில் ஊழலை ஒழிக்க போராடி வரும் குரு பாபா ராம்தேவ் நேற்று டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்துக்கொண்டியிருந்தார். அப்போது 35 வயது மதிக்கத்தக்க பாரதிய ஜனதாயை சேர்ந்த தொண்டர் கம்ரான் சித்திக் என்பவர் கையில் மையை பாபா ராம்தேவ் முகத்தில் வீசினார். இதில் அவரது முகம் மற்றும் அவர் அணிந்திருந்த சட்டையில் மை பட்டது.  உடனே ராம்தேவ் ஆதரவாளர்கள் அவரை பிடித்து தர்ம அடி கொடுத்தனர்.  மருத்துவமனையில் அனுமி பின்னர் அந்த நபரை போலீசாரிடம் ஒப்படைத்தனர். பாபா ராம்தேவ் மீது மையை பீச்சியடிக்க அந்த நபர் முயற்சி செய்தார் என்று முதலில் கூறப்பட்டுள்ளது. ஆனால் இந்த சம்பவத்தை டி.வி.யில் ஒளிபரப்பியபோது ராம்தேவ் அணிந்திருந்த ஆடையில் மை ஊற்றப்பட்டிருந்தது தெரியவந்தது. இதனையொட்டி விசாரித்ததில் கம்ரான் சித்திக், பாபா ராம்தேவ் முகம் மற்றும் உடம்பில் மையை பீச்சி அடித்தது தெரியவந்தது. மையை பீச்சியடித்தவரை போலீசார் பிடித்து பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடந்த இடத்தில் இருந்து காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். பின்னர் சித்திக் உடம்பில் பல இடங்களில் காயம் இருந்ததால் அவரை டெல்லியில் உள்ள ராம் மனோகர் லோகியா மருத்துவமனையில் போலீசார் அனுமதித்தனர்.  இந்த சம்பவம் நடந்தவுடன் அந்த இடத்தை ராம்தேவ் உடனடியாக காலி செய்துவிட்டு கிளம்பினார். இந்த சம்பவத்தின்போது ஜனதா கட்சி தலைவர் டாக்டர் சுப்பிரமணியசாமியும் உடன் இருந்தார். சட்டசபை தேர்தல் நடக்கும் 5 மாநிலங்களில் மக்களிடையே ஊழலுக்கு எதிராக மக்களிடத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் யாத்திரை செல்லப்போவதாகவும் ராம்தேவ் தெரிவித்தார்.   

ஊழலுக்கு எதிராக டெல்லியில் உள்ள ராம்லீலா மைதானத்தில் ராம்தேவ் உண்ணாவிரதம் இருந்தபோது அவரையும் அவரது ஆதரவாளர்களையும் நள்ளிரவில் போலீசார் தடியடி நடத்தி விரட்டி அடித்தனர். இதனையொட்டி அங்கிருந்து உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டு உத்தராகாண்ட் மாநிலத்திற்கு சென்று தனது ஆசிரமத்தில் ராம் தேவ் உண்ணாவிரதம் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்