முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமேதி தொகுதியில் பிரியங்கா 3 நாட்கள் சுற்றுப்பயணம்

ஞாயிற்றுக்கிழமை, 15 ஜனவரி 2012      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி,ஜன.15 - அமேதி தொகுதியில் பிரியங்கா காந்தி நாளை முதல் 3 நாட்கள் சுற்றுப்பயணம் செய்கிறார். அப்போது காங்கிரஸ் நிர்வாகிகளை பிரியங்கா சந்தித்து பேசுவார் என்று தெரிகிறது. உத்திரப்பிரதேச மாநில சட்டசபைக்கு 7 கட்ட தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் கட்ட தேர்தல் பிப்ரவரி மாதம் 4-ம் தேதி நடக்கவிருந்தது. பின்னர் 8-ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. உத்திரப்பிரதேச மாநிலம் முக்கியமானதாக இருப்பதால் அனைத்து அரசியல் கட்சிகளும் அந்த மாநிலத்தில் கவனம் செலுத்தி வருகின்றனர். உத்திரப்பிரதேச மாநிலத்தில் சமீபத்தில் ராகுல் காந்தி சுமார் ஒருவார காலம் சுற்றுப்பயணம் செய்தார். தற்போது அவரது சகோதரி 3 நாட்கள் அமேதி தொகுதியில் சுற்றுப்பயணத்தை நாளை முதல் தொடங்குகிறது. இந்த பயணத்தின்போது அவர், பொதுக்கூட்டங்களிலோ அல்லது பேரணியிலோ கலந்து கொள்ளமாட்டார். ஆனால் ஆங்காங்கே கட்சி நிர்வாகிகளை சந்தித்து சட்டசபையில் காங்கிரஸ் வெற்றிபெறுவதற்கான ஆலோசனை கேட்டறிவார் என்றும் ஊழியர்களை தேர்தல் பணியில் தீவிரமாக ஈடுபடுமாறு கேட்டுக்கொள்வார் என்றும் தெரிகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்