முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொலைவெறிப் பாடலை தடை செய்ய வேண்டுகோள்

ஞாயிற்றுக்கிழமை, 15 ஜனவரி 2012      சினிமா
Image Unavailable

 

மதுரை,ஜன.15 - மதுரை தியாகதீபம் பேரவை சார்பில் சுவாமி விவேகானந்தர் பிறந்ததினவிழா டி.பி.கே.ரோடு நற்பணி மன்ற அலுவலகத்தில் அதன் அமைப்பாளர் அ.பாலு தலைமையில் நடைபெற்றது. கவியரசு கண்ணதாசன் நற்பணி மன்ற செயற்குழு உறுப்பினர் ரெ.கார்த்திகேயன், சமூக சேவகர் எஸ்.சீனிவாசன் முன்னிலை வகித்தனர். வீரத் துறவி சுவாமி விவேகானந்தரின் திருஉருவப் படத்திற்கு மாலையணிவித்து உறவும்துறவும் என்ற தலைப்பில் மதுரைமநகர் மாவட்ட காங்கிரஸ் முன்னாள் பொதுச்செயலாளர் ரா.சொக்கலிங்கம் சிறப்புரை ஆற்றுகையில் இளைஞர்கள் நலனையும் திறனையும் காப்பது விவேகானந்தரின் முதல் பணியாக இருந்தது. ஆனால் உலகில் இளைய சக்தியை நிரம்பப்பெற்றுள்ள நமது இந்தியாவில் இளைஞர்களின் எதிர்காலத்தைச் சீரழித்து அவர்களை மேற்கத்தியப் பண்பாட்டுக்கு அழைத்துச் செல்ல பல அன்னிய சக்திகள் செயல்படுகின்றன. நமது தமிழ் சினிமா மூலம் ஒய் திஸ் கொலை வெறி என்ற பாடல் மொழிக்கொலையில் நம்பர் ஒன். சீரழிவில் கொண்டு செல்வதில் நம்பர் ஒன் குடிப்பழக்கம் இன்னும் கூடும் வகையில் நம்பர் ஒன். இப்படி உலகின் உயர்ந்த மொழியான நமது தமிழ் தொழியில், தமிழ்ப்படத்தில் இதை பதிவு செய்துள்ளது இந்த நூற்றாண்டின் மிகப்பெரும் தவறு. இதை தமிழினத் தலைவர்கள் என்ற பேர்வையில் உள்ள பல தலைவர்கள் வாய்மூடி வேடிக்கை பார்ப்பது வெட்டுகக்கேடு. காவணம் ஏதவாவது கருத்துச் சொன்னால் மிகப்பெரிய டி.வி.மற்றும் ஊடகம் பழிவாங்கிவிடுமோ என்ற ஒரே பயன். மேலும் இரண்டு நடிகின் குடும்பப்பகையை சந்திக்க நேரிடும் என்ற பயம்.  இந்தியாவின் ஒற்றுமை எவ்வளவு முக்கியமோ அதைவிட மிக முக்கியம் தாய்மொழிப் பற்று. அதனை நமது தமிழர்கள் உணர்ந்து செயல்பட வேண்டிய நேரமிது. 

எனவே நமது தமிழக முதல்வர் ஜெயலலிதா தமிழ் வளர்ச்சித்துறை மூலம் இது குறித்து நடவடிக்கை எத்து தமிழின் சிறப்பை பாதுக்காத்திட வேண்டுகிறோம். விழாவில் கவிஞர் பாலகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கவிஞர் மீ.சுப்பிரமணியன் நன்றி கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்