முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஏர்-இந்தியா விமான ஊழியர்கள் மீண்டும் ஸ்டிரைக்

ஞாயிற்றுக்கிழமை, 15 ஜனவரி 2012      வர்த்தகம்
Image Unavailable

 

புதுடெல்லி,ஜன.15 - அலவன்ஸ் மற்றும் இதர சலுகைகள் தரப்படாததை கண்டித்து ஏர் இந்தியா விமான கம்பெனி ஊழியர்கள் நேற்று மீண்டும் ஸ்டிரைக்கில் ஈடுபட்டனர். இதனால் சுமார் 20-க்கும் மேற்பட்ட விமான சர்வீஸ் பாதிக்கப்பட்டதாக தெரிகிறது. சம்பளம் உயர்வு மற்றும் இதர அலவன்ஸ்களை கூடுதலாகவும் சரியான நேரத்திலும் வழங்கக்கோரி ஏர் இந்தியா கம்பெனி ஊழியர்கள் கடந்த மாதம் ஸ்டிரைக் செய்தனர். இதனையடுத்து அவர்களுக்கு கூடுதல் சம்பளம் மற்றும் அலவன்ஸ்களை சரியான நேரத்தில் கொடுக்க பேச்சுவார்த்தையின்போது ஒப்புக்கொள்ளப்பட்டது. ஆனால் அதன்படி தராததால் ஏர் இந்திய கம்பெனி ஊழியர்கள், விமானிகள் நேற்று மீண்டும் டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் டெல்லியில் இருந்து நாக்பூர், ஆமதாபாத், சென்னை, லே, பெங்களூர், பாக்டோக்ரா, அமிர்தசரஸ், கொல்கத்தா ஆகிய 8 நகரங்களுக்கு செல்ல வேண்டிய விமானங்கள் செல்லவில்லை. மேலும் மும்பையில் இருந்து புறப்படவிருந்த 7 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுவிட்டன. இந்த வேலைநிறுத்தம் நேற்றுமுன்தினம் நள்ளிரவில் இருந்து தொடங்கியது. இதனையொட்டி விமானிகள் மற்றும் ஊழியர்களுக்கு தரவேண்டிய அலவன்ஸை விரைவில் கொடுப்பது குறித்து மத்திய அரசும் விமான கம்பெனி நிர்வாகமும் தீவிர பரிசீலனை செய்து வருவதாக தெரிகிறது. விடுமுறை எடுத்துள்ள விமானிகள் எதுவும் முன்கூட்டியே சொல்லவில்லை. ஆனால் சில விமானிகள் தங்களுக்கு சுகமில்லை என்று கூறியுள்ளனர். டெல்லியில் மட்டும் விமான போக்குவரத்து சிறிது பாதித்தது. நாட்டின் இதர பகுதிகளில் விமான போக்குவரத்து பாதிக்கவில்லை என்று மத்திய சிவில் விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் அஜித் சிங் நேற்று டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் தெரிவித்தார். விமான கம்பெனி ஊழியர்களுக்கு சம்பள பட்டுவாடா பிரச்சினை உள்ளது. ஒரீரு மாதங்கள் மட்டுமே சம்பளம் கொடுக்கப்படவில்லை. ஆனால் பல மாதங்களாக அலவன்ஸ் கொடுக்கப்படவில்லை என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். அதேசமயத்தில் ஏர் இந்தியா கம்பெனியின் நிதிநிலைமை மிகவும் மோசமாக இருப்பதையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும். கம்பெனியின் வங்கிக்கணக்கும் முடக்கப்பட்டுவிட்டது என்றும் அஜித்சிங் மேலும் கூறினார். 

இதற்கிடையில் மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜியை அஜித்சிங் சந்தித்து பேசுகிறார். இந்த சந்திப்பின்போது ஏர் இந்திய விமான கம்பெனியின் நிதிநெருக்கடியை சமாளிக்க நிதி ஒதுக்கீடு செய்யுமாறு முகர்ஜியை அஜித்சிங் கேட்டுக்கொள்வார் என்று தெரிகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்